Jul 20, 2024
By: Nivethaஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் பணம், காசு என்பதை எல்லாம் தேடி சென்றாலும் இறுதியில் அனைவருக்கும் தேவையான ஒன்று நிம்மதி தான். நிம்மதியான வாழ்க்கை அனைவருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. அப்படி நிம்மதி கிடைத்துவிட்டால் அவனே மிக பெரிய பாக்கியசாலி.
Image Source: pexels
ஒருவன் தனது வாழ்நாளில் பாதி நாட்கள் நிம்மதியை தேடி ஓடி ஓடி ஓய்ந்து போகிறான் என்று சில ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கிறது. ஒருவன் தனது வாழ்க்கையை நிம்மதியாக வாழ ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினால் சாத்தியமாகும் என்பதை இப்பதிவு எடுத்துரைக்கிறது.
Image Source: pexels
நமக்கான சந்தோஷத்தை யாராலும் தர இயலாது. நமக்கான சந்தோசம் நமது மனதளவில் தான் உள்ளது. வசதியான வாழ்வு மட்டும் ஒருவருக்கு சந்தோஷத்தை கொடுத்து விடாது. குடிசையில் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழும் பலரை அவர்கள் முகமே நமக்கு காட்டி கொடுக்கும்.
Image Source: pexels
நமது வாழ்க்கையில் எது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நான் சந்தோஷமாக தான் இருப்பேன் என்னும் தீர்மானம் நமக்குள் இருக்க வேண்டும். அப்படி இருந்துவிட்டால் மிகவும் நிம்மதியான வாழ்க்கையை நாம் பெற்று விட முடியும் என்பதே நிதர்சன உண்மை.
Image Source: pexels
மனிதர்கள் செய்யும் மிக பெரிய தவறு என்னவென்றால் நிகழ்காலத்தில் வாழாமல் கடந்த காலத்தில் நடந்ததை நினைத்து கொண்டும், எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டு கொண்டும் இருப்பது தான். இதனால் மனிதன் தன்னுடைய நிகழ்கால சந்தோஷம் மற்றும் நிம்மதியை இழக்கிறான்.
Image Source: pexels
இந்த நிமிடம் இனிமையானது, நான் இதில் சந்தோஷமாக தான் இருக்கிறேன் என்பதை நாம் உறுதியாக மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணம் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் தீர்க்கமாக ஏற்படும் பட்சத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.
Image Source: pexels
நாம் ஒருவரை பார்த்தவுடனே அவர்களை குறித்து ஒரு மதிப்பீடு செய்து கொள்கிறோம், அதனடிப்படையில் அவர்களோடு பழகுவோம். நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றப்படி அவர்கள் இல்லை என்னும் பட்சத்தில் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு ஒதுங்கி கொள்கிறோம். இது மிகப்பெரிய தவறு, ஒருவருடைய நற்பண்பு மற்றும் தீயப்பண்பு ஆகியவற்றை நன்றாக தெரிந்து கொண்டே ஒருவரை மதிப்பிட வேண்டும்.
Image Source: pexels
பெரிய வசதியான வாழ்க்கையில் இருந்தாலும் சரி, சிறிய கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி நமக்கு கடவுள் கொடுத்திருக்கிற வாழ்க்கை மிகவும் பெரிய விஷயம் என்று எண்ணி என்றும் நன்றி உணர்வுடன் இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றி கூற வேண்டும். அப்படி இருந்தால் நிச்சயம் நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.
Image Source: pexels
எந்தவொரு விஷயத்திலும் பொறுமை என்பது மிகவும் அவசியமானது. வெற்றி ஒரே நாளில் கிடைத்து விடாது, அதற்கான உழைப்பு, முயற்சி மற்றும் அதற்கான காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். சாதனை படைத்த எவரும் குறுகிய காலத்தில் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. பொறுமை நிச்சயம் நிம்மதியை கொடுக்கும்.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!