[ad_1] நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டு வர இப்படி செய்து பாருங்க

Jun 13, 2024

நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டு வர இப்படி செய்து பாருங்க

Mohana Priya

​வாட்டர் பாட்டில்

எங்கு சென்றாலும் கையோடு தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள். தாகம் எடுக்கா விட்டாலும் 10 நிமிடத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள்.

Image Source: iStock

போனில் ரிமைன்டர்

வேலை அல்லது மீட்டிங்கில் இருக்கிறீர்கள் என்றால் போனில் தண்ணீர் குடிப்பதற்கு ரீமைன்டர் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடித்துள்ளீர்கள் என்ற அளவையும் இது கணக்கிட்டு சொல்லும்.

Image Source: iStock

குளிர்பானங்களுக்கு பதில் தண்ணீர்

கார்போனேட், இனிப்பு, சோடா கலந்த குளிர்பானங்களுக்கு பதில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்தக் கொண்டு, தாகம் எடுக்கும் போது அதிக தண்ணீரை குடிக்கலாம்.

Image Source: iStock

தண்ணீர் சத்துள்ள பழங்கள்

தண்ணீர் சத்துக்கள் அதிகம் நிறைந்த தர்பூசணி, அன்னாசிப்பழம், வெள்ளரிக்காய் போன்ற பழங்களை அதிக சாப்பிடலாம். இது ஆரோக்கியமானதுடன், கலோரி குறைந்த ஸ்நாக்சாகவும் இருக்கும்.

Image Source: Samayam Tamil

பிடித்த சுவையில் தண்ணீர்

புதினா இலைகள், எலுமிச்சை, ஆரஞ்சு, வெள்ளரி துண்டுகள் போன்றவற்றை பொருட்களை தண்ணீருடன் கலந்து உங்களுக்கு பிடித்த சுவையில் மாற்றி, விருப்பமுடன் தண்ணீரை குடியுங்கள்.

Image Source: iStock

ஒவ்வொரு முறையும் தண்ணீர்

பல் துலக்கிய பின், சாப்பிட்ட பின், ஒவ்வொரு முறை கழிவறை சென்ற வந்ததும் என எதைச் செய்தாலும் உடனடியாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க பழக்கலாம்.

Image Source: iStock

​தண்ணீர் சவால்

உங்கள் நண்பர்கள் அல்லது குழந்தைகளுடன் ஆரோக்கியமான போட்டியாக ஒரு அளவு வைத்து தினமும் இலக்கை அடைந்து, வெற்றி அடைய முயற்சி செய்யுங்க.

Image Source: iStock

​காலி தண்ணீர் பாட்டில்

எப்போது வெளியில் சென்றாலும் பாட்டில் முழுவதும் தண்ணீர் நிரப்பி எடுத்து செல்லுங்கள். திரும்பும் போது காலியாக எடுத்துச் செல்லும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

Image Source: iStock

தண்ணீருடன் துவங்குதல்

காலையில் எழுந்ததும், இரவு படுக்க செல்வதற்கு முன்பும், சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.

Image Source: iStock

Thanks For Reading!

Next: குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு? காரணமும் - தீர்வுகளும்!

[ad_2]