Jun 22, 2024
நாம் அனைவருக்குமே ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ வேண்டும் என்னும் ஆசை இருக்கும். அதற்கான சில குறிப்புகளை தான் இந்த பதிவில் நாம் காணவுள்ளோம்.
Image Source: pexels
ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமே நாம் எடுக்கும் உணவுகள் தான். எனவே, பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள் என ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். அதிகப்படியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் உடல் எடையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
Image Source: pexels
உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது என்பது மிக அவசியம். அதுவும் நமது நாட்டின் வெப்பநிலை காரணமாக சீக்கிரம் நீரிழப்பு ஏற்படக்கூடும். எனவே தாகமே எடுக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பது நல்லது.
Image Source: pexels
ஒரு மனிதனுக்கு நல்ல தூக்கம் மிக முக்கியம். 7ல் இருந்து 9 மணிநேர தரமான தூக்கத்தை உறுதி செய்து கொள்ளுங்கள், முடிந்தளவு இரவு 10 மணிக்கு முன்னரே தூங்க முயற்சி செய்யுங்கள்.
Image Source: pexels
நமது உடல்நலத்தினை தாண்டி மனநல ஆரோக்கியமும் பேணி பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும். தினமும் குறைந்தப்பட்சம் ஒரு 10 நிமிடமாவது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியினை மேற்கொள்ளுங்கள்.
Image Source: pexels
வாய் சுகாதாரம் என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் ஒரு நாளைக்கு 2 முறை பல் துலக்கி வாய் மற்றும் பல் சுகாதாரத்தினை பேணுங்கள்.
Image Source: pexels
தொற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க சுத்தம் மிக முக்கியம். கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும், குறிப்பாக கழிவறையை பயன்படுத்திய பின்னர் கைகளை சுத்தமாக கழுவுவது கட்டாயம்.
Image Source: istock
மது, புகையிலை போன்ற பழக்கங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. இந்த பழக்கம் இருந்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் வந்து விடும். எனவே, இதுபோன்ற கெட்ட பழக்கங்களை தவிருங்கள்.
Image Source: pexels
நமது உடலில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பதை கண்டறிய ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து பார்ப்பது மிக முக்கியம்.
Image Source: pexels
Thanks For Reading!