Jul 6, 2024
கோடை காலங்களில் நமது உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு பல குறிப்புகள் கூறப்பட்டாலும், நமது உடல் நீரேற்றத்துடன் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்னும் கேள்வி நம்முள் பலருக்கு உண்டு.
Image Source: pexels
நீங்கள் நீரேற்றமாக உள்ளீர்களா இல்லை நீரிழப்புடன் உள்ளீர்களா என்பதை கண்டறிய ஒரு வழிமுறையை தான் இப்பதிவில் நீங்கள் பார்க்கவுள்ளீர்கள்.
Image Source: pexels
உங்கள் உடல் நீரேற்றமாக உள்ளதை அறிந்து கொள்ள கிள்ளுதல் சோதனை மிகவும் எளிமையானது.
Image Source: pexels
இந்த சோதனையை மேற்கொள்ள உங்கள் கை, கால் அல்லது விரலின் தோலினை தொடர்ந்து 3 வினாடிகள் கிள்ளுங்கள்.
Image Source: pexels
நீங்கள் கிள்ளி 3 வினாடிக்கு பிறகு விட்டதும், அப்பகுதியிலுள்ள தோல் ஓரிரு வினாடிகளில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினால் நீங்கள் நீரேற்றமாக இருப்பதாக அர்த்தம்.
Image Source: pexels
அப்படி கிள்ளி விட்ட பிறகு தோல் பழைய நிலைக்கு திரும்ப அதிக வினாடிகள் எடுத்தால் உங்கள் உடலில் நீர் சத்து குறைவாக உள்ளது என்று பொருளாகும்.
Image Source: pexels
நீங்கள் நீரேற்றமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் தோல் தண்ணீரை தக்கவைத்து நெகிழ்வு தன்மையுடன் இருக்கும். அதனால் தான் ஓரிரு வினாடிகளிலேயே அது தனது இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
Image Source: pexels
அதுவே நீங்கள் நீரிழப்புடன் இருந்தால் போதிய நெகிழ்வு தன்மை இல்லாத காரணத்தினால் உங்கள் தோல் பழைய நிலைக்கு திரும்ப தாமதமாகிறது.
Image Source: pexels
இந்த முறையில் நீங்கள் ஒரு துல்லியமான முடிவினை எடுக்க இயலாது. அதனால் எப்போதும் நீரேற்றமாக இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தினை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!