[ad_1] நீங்கள் வாங்கும் குங்குமப்பூ ஒரிஜினலா? இல்லையா? கண்டுபிடிப்பது எப்படி?

நீங்கள் வாங்கும் குங்குமப்பூ ஒரிஜினலா? இல்லையா? கண்டுபிடிப்பது எப்படி?

Jul 16, 2024

By: Anoj

குங்குமப் பூ பயன்பாடு

குங்குமப் பூ நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும், அழகுப் பராமரிப்பிலும் பயன்படுகிறது. அது விலை மதிப்பற்ற மசாலாப் பொருளாகும். ஆனால், அதில் நிறைய கலப்படங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நீங்கள் வாங்கும் குங்குமப் பூ ஒரிஜினலா என்பதை கண்டறியும் வழிகளை பற்றி இங்கு பார்க்கலாம்

Image Source: istock

நிற சோதனை

உண்மையான குங்குமப் பூவை நீங்கள் தண்ணீரில் போட்டால் அது தங்க மஞ்சள் நிறத்தை உங்களுக்கு கொடுக்கும். இதுவே போலியான குங்குமப் பூவை தண்ணீரில் போட்டால் உடனடியாக சிவப்பு நிறம் தோன்றும். உண்மையான குங்குமப் பூ தண்ணீரில் நிறத்தை காட்ட சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

Image Source: istock

சுவை மற்றும் வாசனை

உண்மையான குங்குமப் பூ இனிப்பு மற்றும் மண் சுவை கொண்டது. தேன் போன்ற வாசனை பிரதிபலிக்கும். ஆனால் போலியான குங்குமப் பூ கசப்பு சுவையுடன் காணப்படும். இதற்கு தனித்துவமான வாசனை எதுவும் இல்லை.

Image Source: istock

தோற்றம்

உண்மையான குங்குமப் பூ இலைகள் அடர் சிவப்பு நிறமாகவும், சற்று ஈரமாகவும், மீள் தன்மையுடனும் காணப்படும். போலி குங்குமப்பூ தட்டையாகவும், உடையக் கூடியதாகவும் இருக்கும்.

Image Source: istock

கரையும் திறன்

உண்மையான குங்குமப் பூவை நீங்கள் பாலில் போட்டால் அது முழுமையாக கரையாக 10- 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் போலி குங்குமப் பூ விரைவில் கரைந்து அதன் நிறத்தை இழக்க நேரிடும்.

Image Source: istock

காகித சோதனை

ஒரு ஈரமான பேப்பர் டவல் மீது குங்குமப் பூவை வைத்தால் அது நிறத்தை தக்க வைத்துக் கொள்ளும். அதுவே போலியான குங்குமப் பூவை பேப்பர் டவலில் வைத்தால் அதன் சிவப்பு நிறம் உடனடியாக துண்டு முழுவதும் பரவும்.

Image Source: istock

ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்தவை

குங்குமப்பூவில் குரோசின், சஃப்ரானல் மற்றும் பிக்ரோக்ரோசின் போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கலில் இருந்து செல்களை காக்கிறது.

Image Source: istock

செரிமானத்தை மேம்படுத்துகிறது

குங்குமப் பூ செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது வீக்கம் மற்றும் வாயுவைக் குறைக்கிறது. செரிமான மண்டலத்தை தூண்டுகிறது. பசியை ஊக்குவிக்கிறது.

Image Source: istock

மனநிலையை மேம்படுத்துகிறது

குங்குமப் பூ ஆண்டிடிரஸன் பண்புகளால் மனநிலையை மேம்படுத்துகிறது. இது மூளையின் செரோடோனின் அளவை அதிகரிப்பதன் மூலம் மனச்சோர்வு அறிகுறிகளை போக்குகிறது.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: ஆனந்த் - ராதிகா ஜோடிக்கு முகேஷ், நீதா அம்பானி கொடுத்த பரிசுகள் என்ன தெரியுமா?

[ad_2]