[ad_1] நீட் பயிலும்  மாணவர்கள் நம்பவே கூடாத கட்டுக்கதைகள் என்ன தெரியுமா?

Jul 11, 2024

நீட் பயிலும் மாணவர்கள் நம்பவே கூடாத கட்டுக்கதைகள் என்ன தெரியுமா?

Anoj

நீட் கட்டுக்கதைகள்

மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகியுள்ள நிலையில், அந்த தேர்வு தொடர்பாக பல விதமான தவறான தகவல்கள் மாணவர்களிடையே பரவி வருகிறது. அதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்

Image Source: unsplash-com

டாப்பர்ஸ் மட்டுமே தேர்ச்சி பெறலாம்

இது முற்றிலும் தவறான கூற்றாகும். நீட் தேர்வில் தேர்ச்சிபெறுவது கடினம் என்றாலும், சரியான வழிகாட்டுதல், அர்ப்பணிப்ப மற்றும் விடாமுயற்சியுடன் போராடினால் எந்த மாணவர்களாலும் தேர்ச்சி பெற முடியும்

Image Source: unsplash-com

எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்

நீட்டில் தேர்ச்சிபெற அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்பது அவசியமற்றது. நீட் தேர்வில் தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் வரக்கூடும். எனவே, நன்கு தெரிந்த கேள்விகளை யோசித்து பதிலளியுங்கள். கடமைக்காக்க பதில் அளிப்பது தேவையற்றது

Image Source: pexels-com

பொழுதுப்போக்கு இருக்காது

பிற படிப்புகளுடன் ஒப்பிடுகையில் மருத்துவ படிப்பிற்கு பல விதமான புத்தகங்களை படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற முடியும். அதற்கு பொழுதுப்போக்கு இருக்காது என்பது தவறாகும். படிப்பையும், பொழுதுப்போக்கு விஷயங்களையும் சம அளவில் கையாள கற்க வேண்டும்

Image Source: unsplash-com

மருத்துவ படிப்பு பணக்காரருக்கு மட்டுமே

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு பேக்கிரவுண்ட் அவசியமற்றது. நீங்கள் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றால், அரசு மருத்துவ கல்லூரியில் குறைவான செலவில் கட்டாயம் இடம் கிடைக்கக்கூடும்

Image Source: unsplash-com

கோச்சிங் இல்லாமல் பாஸ் ஆக முடியாது

நீட் தேர்வுக்கு கோச்சிங் செல்வது சிறந்த முடிவு என்றாலும், கட்டாயம் கிடையாது. நீங்கள் வீட்டில் இருந்தப்படியே ஆன்லைன் தளங்களை ஆராய்ந்து படித்துக்கொள்ளலாம். கோச்சிங் செல்லாமல் நல்ல மதிப்பெண்கள் எடுத்த ஏராளமான மாணவர்கள் உள்ளனர்

Image Source: unsplash-com

உயிரியல் மட்டுமே முக்கியம்

நீட் தேர்வில் உயிரியல் பாடப்பிரிப்பு குறிப்பிடத்தக்க அளவை கொண்டிருந்தாலும், இயற்பியல் மற்றும் வேதியியலை முற்றிலுமாக புறக்கணிப்பது தவறாகும். நீட் வினாத்தாளில் பாதி கேள்விகள் இயற்பியல் மற்றும் வேதியியலில் இருந்து வரும் என்பதை மறக்காதீர்கள்

Image Source: istock

ஒரு ஆண்டு வீணாகலாம்

நீட்டில் சேர விரும்புவோர் ஒரு ஆண்டை இழக்க வேண்டும் என்பது உண்மையல்ல. அது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பமாகும். நீங்கள் ஓராண்டு பிரேக் எடுக்கலாம் அல்லது சரியான வழிகாட்டுதலை பின்பற்றி முதல் முயற்சியிலே வெற்றிபெறலாம்

Image Source: istock

நீண்ட காலத்தை இழந்துவிடுமோம்

பிற உயிரை காப்பாற்றும் மருத்துவ துறையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு 9 முதல் 10 ஆண்டுகள் கூட ஆக செய்யலாம். ஆனால், எண்ட் ரிசல்ட் சிறப்பாக இருக்கக்கூடும். பல ஆண்டுகளை இழக்க நேர்ந்தாலும், பல உயிர்களை காப்பாற்றும் திறனை பெறுவீர்கள்

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: 'மன அழுத்தத்தை' உண்டாக்கும் கடினமான வேலைகள் என்ன தெரியுமா?

[ad_2]