May 30, 2024
By: mukesh Mஒரு சிலருக்கு மாதவிடாய் 3 - 5 நாட்கள் வரை நீடிக்கும்; ஒரு சிலருக்கு இதற்கு மேலும் நீடிக்கும். நிற்காமல் நீடிக்கும் இந்த மாதவிடாயினை ஒரு சில வீட்டு வைத்திய குறிப்பு பயன்படுத்தி தீர்வு காண்பது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
பெண்களில் நீண்ட நாட்கள் மாதவிடாய் ஏற்படுவதற்கு ஹார்மோன் சமநிலையின்மை, கருப்பை நார் திசு கட்டிகள், அடினோமயோசிஸ், தைராய்டு பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.
Image Source: istock
ரத்தத்தின் அளவை பராமரிக்க நீர் சத்து உடலுக்கு மிகவும் அவசியம். எனவே மாதவிடாய் காலங்களில் அதிக நீர் பருகுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது மாதவிடாய் கால ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் என்பதால் ரத்த சோகை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே கீரைகள், பீன்ஸ் மற்றும் தானிய வகைகள் போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
மாதவிடாய் காலகட்டங்களில் ஏற்படும் சோர்வினை சரி செய்ய மூலிகை தேநீர்களை பயன்படுத்தலாம். ராஸ்பெரி இலையில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை குறைக்க உதவும்.
Image Source: pexels-com
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று பிடிப்புகளை சரி செய்ய ஹீட் தெரபி போன்றவற்றை பயன்படுத்தலாம். தற்போது மார்க்கெட்டுகளில் ஹீட் தெரப்பிக்கு என தனியாக பொருட்கள் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் ரத்த நாளங்களை வலுப்படுத்த சிட்ரஸ் பழங்கள் உதவுகின்றன. உங்கள் உணவுகளில் ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெரிகள் போன்று வைட்டமின் சி நிறைந்த பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். இது மாதவிடாய் கால இரத்தப்போக்கை குறைக்க உதவுகிறது.
Image Source: istock
மாதவிடாய் காலங்களில் உங்கள் உணவுகளில் மஞ்சளை சேர்த்துக் கொள்ளுதல் அல்லது மருத்துவ ஆலோசனையுடன் மஞ்சள் பண்புகளை கொண்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்வது போன்றவை மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அழற்சிகளை சரி செய்ய உதவும்.
Image Source: istock
அன்னாசி பழத்தில் உள்ள பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அறிகுறிகளை சரி செய்ய உதவுகிறது. அன்னாசி பழம் சூடு என்பதால் அளவாக உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!