Jul 25, 2024
நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளோர் தங்கள் உணவில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அவர்கள் விரும்பி உண்ணும் உணவுகள் தவிர்க்கப்படவேண்டிய சூழல் இதனால் அவர்களுக்கு ஏற்படுகிறது. முக்கியமாக கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
Image Source: pexels
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் வெகு சிலரே. இதில் அதிகளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. எனினும், நீரிழிவு நோயாளிகள் முற்றிலுமாக உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அதனை சமைக்கும் முறைகளை மாற்றி அளவாக சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.
Image Source: pexels
தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர், உருளைக்கிழங்கினை சமைத்து சாப்பிடுவது குறித்து ஒருசில வழிமுறைகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளார். நீரிழிவு நோயில் டைப் 2 உங்களுக்கு இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உருளைக்கிழங்கை சாப்பிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Image Source: pexels
உருளைக்கிழங்கை சமைத்து அதனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இப்படி வைப்பதனால் அதிலுள்ள கிளைசெமிக் குறியீடு குறைக்கவும், ரெசிஸ்டெண்ட் ஸ்டார்ட் அதிகரிக்கவும் உதவுகிறது. ரெசிஸ்டெண்ட் ஸ்டார்ட் நார்சத்து போல் செயல்படுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது குறையும்.
Image Source: pexels
உருளைக்கிழங்கை சமைக்கும் பொழுது அதில் வினிகர் சேர்க்கவும், குறிப்பாக மால்ட் வினிகர் சேர்ப்பதால் அதிலுள்ள கிளைசெமிக் குறியீடு குறைகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவை நம்மால் நிர்வகிக்கவும் முடியும், சுவையான ஆரோக்கியமான உருளைக்கிழங்கை சாப்பிட்டு மகிழவும் முடியும்.
Image Source: pixabay
நீங்கள் உருளைக்கிழங்கை சாப்பிடும் முன்னர் உணவிலுள்ள மற்றும் காய்கறிகள், புரதங்களை சாப்பிடுங்கள். இதிலுள்ள ப்ரோட்டின் மற்றும் நார்சத்து உங்களுக்கு நிறைவான உணர்வை கொடுக்கும் என்பதால் கார்போஹைட்ரேட் நிறைந்த உருளைக்கிழங்கை குறைந்தளவில் சாப்பிட உதவும்.
Image Source: pixabay
உருளைக்கிழங்கை தோலுடன் பேக் செய்வது அல்லது வறுப்பது சிறந்த வழி என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதனால் தோலிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்சத்து இணைந்து உட்கொள்ளப்படுவதால் கார்போஹைட்ரேட் அளவினை ஈடுசெய்ய உதவும்.
Image Source: Samayam Tamil
உருளைக்கிழங்கை மற்ற வகைகளில் சமைப்பதோடு அதனை பாய்லிங் அல்லது ஸ்டீமிங் செய்து சாப்பிடுவது நல்லது. இப்படி சாப்பிடுவதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்சத்துக்களை தக்க வைத்து கொள்ள முடியும். ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.
Image Source: pixabay
டீப் ஃபிரை அல்லது பிரேஞ்சு ஃபிரை செய்து உருளைக்கிழங்கை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து விட கூடும் என்று நிபுணர் கூறியுள்ளார். மேலும் இவ்வாறு சாப்பிட்டால் அதில் தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் அதிகமிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: pexels
Thanks For Reading!