Jul 31, 2024
BY: Anoj, Samayam Tamilஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமான உணவாகும். அதனை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் எப்படி புட்டு செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
ஓட்ஸ் - 1 கப்; தேங்காய் துருவல் - தேவைக்கேற்ப; வெல்லம் - சிறிதளவு; முந்திரி - 5; ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை; நெய் - 2 டீஸ்பூன்; உப்பு - சுவைக்கேற்ப
Image Source: istock
முதலில் ஓட்ஸை பிளெண்டரில் போட்டு நன்றாக அரைத்துகொள்ளவும்.
Image Source: pexels-com
அத்துடன் கொஞ்சம் தண்ணீர் விட்டு உதிரியாக பிசைந்து கொள்ளவும். இதனை இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்துகொள்ளவும்
Image Source: istock
இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லத்துடன் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வெல்ல பாகு தயார் செய்யவும்
Image Source: istock
அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி உருகியதும் முந்திரியை போட்டு மிதமான நெருப்பில் வறுத்தெடுக்க வேண்டும்
Image Source: istock
அடுத்து, வேகவைத்த ஓட்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
Image Source: istock
பிறகு, ஏற்கனவே ரெடி செய்த வெல்ல பாகு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
Image Source: istock
இறுதியில், தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காயை பொடியை சேர்த்து கிளறினால் சுவையான ஓட்ஸ் புட்டு ரெடி
Image Source: instagram-com/nilshanaser
Thanks For Reading!