Jun 7, 2024
உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள மாம்பழத்தை, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா கூடாதா என்கிற சந்தேகம் இன்றும் நிலவி வருகிறது. இந்தப் பதிவில், நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பதை பார்க்கலாம்
Image Source: istock
மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை நிறைந்திருந்தாலும், அதனை மிதமான அளவில் உட்கொள்வது பாதுகாப்பானது என நிபுணர்கள் கூறுகின்றனர். சுமார் 100 கிராம் மாம்பழத்தில் 65 கலோரிகள், 17 கிராம் கார்போஹைட்ரேட், 0.8 கிராம் புரோட்டீன் உள்ளது
Image Source: istock
மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ளன. இவை ஒட்டுமொத்த சர்க்கரை அளவு தாக்கத்தை குறைக்க செய்கிறது. குறிப்பாக நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்க பயன்படுகிறது
Image Source: pexels-com
மாம்பழத்தில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளன. அவை ரத்த சர்க்கரை அதிகரிப்புடன் தொடர்புடைய பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது
Image Source: istock
அதிக கிளைசெமிக் குறியீடு உணவுகள், ரத்த சர்க்கரை அளவை சட்டென அதிகரிக்க செய்யலாம். ஆனால், மாம்பழம் 51 எனும் குறைவான கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவாகவே பார்க்கப்படுகிறது
Image Source: istock
இதய ஆரோக்கியம், எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, சரும ஆரோக்கியம், செல் சேதங்கள் தடுப்பு போன்ற நன்மைகள் மாம்பழம் நுகர்வு மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைக்கிறது
Image Source: pexels-com
தினமும் 100 கிராம் வரை மாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்க செய்யாது. அதேநேரம், நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை ஜூஸ் வடிவில் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
Image Source: istock
மாம்பழத்தை காலை நடைப்பயிற்சிக்கு பிறகு, உடற்பயிற்சிக்கு பிறகு அல்லது உணவுக்கு இடையே சாப்பிடுவது சிறந்த நேரமாக பார்க்கப்படுகிறது. மாம்பழத்துடன் அவித்த முட்டை அல்லது நட்ஸ் சாப்பிடுவது கூடுதல் பலனை தரக்கூடும்
Image Source: istock
மாம்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானதாக கருதினாலும், அதன் தாக்கம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபட செய்யலாம். எனவே ரத்த சர்க்கரை அளவை தொடர்ச்சியாக கண்காணித்து வருவது அவசியமாகும்
Image Source: istock
Thanks For Reading!