[ad_1] நீரிழிவு நோய் உள்ளவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாமா ?

Jul 26, 2024

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாமா ?

Nivetha

பனங்கிழங்கு

பனங்கிழங்கு விலை மலிவாக கிடைக்கக்கூடிய ஒரு கிழங்கு ஆகும். இதில் வைட்டமின் பி வைட்டமின் சி, புரத சத்து, கார்போஹைட்ரேட், கலோரிகள், நீர்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளது. இந்த பனங்கிழங்கில் பாதாம் பருப்பில் இருக்கும் சத்துக்கு இணையான சத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Image Source: pixabay

நோய் எதிர்ப்பு சக்தி

பனங்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்தோரைட்டிஸ் போன்ற வாதம் சம்மந்தப்பட்ட நோய்களையும் ஏற்படாமல் தடுக்க கூடியதாகும்.

Image Source: istock

ரத்த சோகை

பனங்கிழங்கில் இரும்பு சத்தும் அதிகம் இருக்கிறதாக கூறப்படுகிறது. எனவே இதனை அடிக்கடி நாம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கும் என்று கூறுகிறார்கள். மலச்சிக்கல் பிரச்சனையையும் இந்த கிழங்கு குணப்படுத்தவும், ஏற்படாமலும் தடுக்க உதவுகிறது.

Image Source: istock

ரத்த சர்க்கரை அளவு

இந்த கிழங்கில் அதிகளவு நார்சத்து உள்ளது, இதன் காரணமாக இது ரத்தத்தின் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.

Image Source: istock

தீங்கு ?

பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மண்ணுக்கு கீழ் விளையும் உணவு பொருட்களை சாப்பிட கூடாது என்று தான் அறிவுறுத்தப்படுவார்கள். ஏனெனில் இது அவர்களது உடல்நிலைக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் பனங்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் அளவாக சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது.

Image Source: istock

பனங்கிழங்கோடு பூண்டு

பனங்கிழங்கை சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு வாயு பிரச்சனை ஏற்படுவது இயல்பு. அப்படி ஏற்பட்டால் அவர்கள் தங்கள் உணவில் பூண்டினை சேர்த்து கொள்ளலாம். பொதுவாகவே பூண்டு செரிமான அமைப்புகளுக்கு நன்மை பயக்கக்கூடிய பண்புகளை கொண்டதாகும்.

Image Source: istock

பனங்கிழங்கோடு மிளகு

பனங்கிழங்கை சாப்பிட்டு நமது உடல் ஆரோக்கியம் நலம் பெற வேண்டுமெனில் பனங்கிழங்கை சமைக்கும் பொழுது அதில் சிறிதளவு மிளகை சேர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இல்லையெனில் இந்த கிழங்கு நமது உடலில் பித்தத்தை ஏற்படுத்தும்.

Image Source: pixabay

பனங்கிழங்கு மாவு

பனங்கிழங்கை வைத்து அவியல், புட்டு, தோசை போன்ற பல உணவு வகைகளை செய்து சாப்பிடுகிறார்கள். பனங்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து வெயிலில் காயவைத்து அதனை இடித்து பொடியாக்கி கொள்ளலாம். அல்லது பனங்கிழங்கு துண்டுகளை சிறிதுசிறிதாக நறுக்கி வெயிலில் 3 நாட்கள் நன்கு காயவைத்து பொடியாக்கி கொள்ளலாம்.

Image Source: istock

மருத்துவ நன்மைகள்

பனங்கிழங்கை அப்படியே சாப்பிடுவதை விட இப்படி பொடியாக்கி எடுத்து கொண்டால் மருத்துவ நன்மைகளுக்கு மிகவும் சிறந்ததாம். இதில் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் உடல்நலம் சீராக இருக்கும், தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் பெண்களின் கர்ப்பப்பை வலுப்பெறும். காலையில் இந்த மாவினை வைத்து கஞ்சி, கூழ் போன்றவைகளையும் செய்து சாப்பிடலாம்.

Image Source: Samayam Tamil

Thanks For Reading!

Next: இளம் வயதில் ஏற்படும் கழுத்து எலும்பு தேய்மானத்தின் அறிகுறிகள் மற்றும் சில தீர்வுகள்

[ad_2]