நாம் சாலை மார்க்கமாக நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் பொழுது நெடுஞ்சாலைகளை கடந்து செல்வோம். அப்போது சாலைகளில் அரளி செடிகள் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அது ஏன் அங்கு வளர்க்கப்படுகிறது என்பது குறித்த காரணம் யாருக்கும் தெரியாது. குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
Image Source: pixabay
அரளி செடி
இந்த வகை தாவரம் அதிக விஷத்தன்மை கொண்டதாகும். அதனால் இதனை பொதுவாக வீடுகளில் வளர்க்க மாட்டார்கள். ஆனால் இதனை சாலையோரங்களிலும், நெடுஞ்சாலைகளின் நடுப்பகுதிகளிலும் இருப்பதை நாம் அனைவருமே கவனித்திருப்போம்.
Image Source: pixabay
அறிவியல் காரணம்
இந்த செடிகளை நெடுஞ்சாலை பகுதிகளில் வளர்க்க ஓர் அறிவியல் காரணம் உள்ளது என்று கூறப்படுகிறது. நெடுஞ்சாலை பகுதிகளில் அதிகளவு வாகனங்கள் ஓடுவதால் அதிலிருந்து வெளியேறும் புகை பெருமளவில் காற்றை மாசுபடுத்தும்.
Image Source: pixabay
காற்று சுத்திகரிப்பு
வாகனங்களில் இருந்து வெளியேறும் அந்த கார்பன் நச்சுக்கழிவு காற்றை மாசுப்படுத்துகிறது. பொதுவாகவே காற்றில் இருக்கும் நச்சு கழிவுகளை சுத்திகரித்து தூய ஆக்சிஜனாக மாற்றி கொடுக்கும் பண்பு அனைத்து தாவரங்களுக்குமே உள்ளது.
Image Source: pexels
செவ்வரளி செடி
அதன்படி காற்றை சுத்திகரிக்கும் தன்மை செவ்வரளி செடிக்கு சற்று அதிகமாகவே உள்ளது. இந்த செடிகளில் இருக்கும் இலைகளின் அடர்த்தியே இதற்கு காரணம். இந்த செடியால் காற்றில் இருக்கும் கார்பனை மிக எளிதாக உறுஞ்சிக்கொள்ள முடியும். இதனால் தான் இந்த செடிகள் நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படுகிறது.
Image Source: pixabay
குறைந்த பராமரிப்பு
அரளி செடியானது வறண்ட பகுதிகளுக்கு ஏற்ற தாவரமாகும். இதற்கு தனியாக யாரும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டிய தேவை இருக்காது, தானாகவே தனக்கான நீர்ச்சத்தினை உறுஞ்சி வளரக்கூடிய காரணத்திலும் இந்த செடிகள் நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படுகிறது.
Image Source: pexels
இரைச்சல் மாசு
அரளி செடிகள் வளரும் இடத்தில் ஏற்படும் இரைச்சல் மாசுக்கள் கட்டுப்படுத்தப்படும். அதே போல் இந்த செடி மண் அரிப்பினையும் கட்டுப்படுத்தும் என்றும் கூறுகிறார்கள். பார்க்கவும் அழகாக பூக்களோடு காட்சியளிக்கும்.
Image Source: pexels
கால்நடைகள் சாப்பிடாது
அரளி செடிகளை ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் எதுவும் சாப்பிடாது. இதனால் நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் வளரும் இந்த தாவரங்களை சாப்பிட அவைகள் முயற்சித்து இறந்து போகும் அபாயம் ஏற்படாது. மேலும் வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சத்தை எதிரே வரும் வாகனத்தின் மீது படர விடாமலும் இது தடுக்கிறது.
Image Source: pixabay
பயன்பாடு கிடையாது
இந்த செடிகள் அழகிற்கு மட்டுமே பிரதானமாக கருதப்படுவதால் இதனை யாரும் ஒடுக்கவும் மாட்டார்கள். இதுவும் இந்த செடிகள் நமது நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும், நடுப்பகுதிகளிலும் வளர்க்கப்படுவதற்கு ஓர் முக்கிய காரணமாகும்.
Image Source: pexel
Thanks For Reading!
Next: ராட்சத 'பாண்டா' பார்க்க ஆசையா இருக்கா? இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!