Aug 13, 2024
நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஆகிய இரண்டிலும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்திருக்கின்றன். அவற்றை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த டீடாக்ஸ் டிரிங்க் குடிப்பதால் கிடைக்கும் பலன்களை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
இதில் உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டும் கலவைகள் உள்ளது. அவை உடல் கலோரிகள் எரிக்கும் பிராசஸை துரிதப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது
Image Source: istock
இது இயற்கை பொருட்கள் நிறைந்த டீடாக்ஸ் டிரிங்க் ஆகும். இதனை தினமும் குடிப்பது மூலம் உடலில் ஆங்காங்கே தேங்கியுள்ள அழுக்குகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றிட முடியும்
Image Source: istock
நெல்லிக்காய், கறிவேப்பிலை ஆகிய இரண்டிலும் சருமத்தையும், கூந்தலையும் பாதுகாக்கும் பண்புகள் உள்ளது. அதன் தொடர்ச்சியான நுகர்வு, பல்வேறு பொதுவான பிரச்சனைகளிடம் இருந்து நிவாரணம் பெற உதவக்கூடும்
Image Source: istock
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் கறிவேப்பிலை உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவக்கூடும். அதனை தினமும் குடித்து வந்தால், அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் என்று சொல்ல வேண்டிய நிலை வரவே வராது
Image Source: pexels-com
கறிவேப்பிலை அமிலத்தன்மை குறைத்து செரிமான என்சைமை ஊக்குவிக்க செய்கிறது. இதன் மூலம், வீக்கம், வாயு, மலச்சிக்கல் போன்ற வயிற்று அசெளகரியங்கள் நீங்கக்கூடும். நெல்லிக்காய் சாறு செரிமானத்தை மேம்படுத்த உதவக்கூடும்
Image Source: istock
ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது என பல நன்மைகளை கொண்டுள்ளது. இதனால், இதயமும் மிகவும் வலுவாக இருக்கக்கூடும்
Image Source: istock
நெல்லிக்காய் - 2 அல்லது 3; கறிவேப்பிலை - ஒரு கையளவு; உப்பு - தேவைக்கேற்ப; தண்ணீர் - தேவையான அளவு
Image Source: istock
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். பிறகு, பிளெண்டரில் கறிவேப்பிலை, நெல்லிக்காய் துண்டுகள் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இறுதியில், கலவையை வடிகட்டி சுவைக்கு உப்பு சேர்த்து பருகலாம்
Image Source: istock
Thanks For Reading!