May 29, 2024
BY: mukesh Mஇட்லி, தோசையின் சுவையை கூட்டும் பொடி ஒன்றினை மிகவும் எளிய முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
எள்ளு - 1 கப் | பூண்டு பல் - 10 | கறிவேப்பிலை - 1 கொத்து | காய்ந்த மிளகாய் - 3 | புளி - நெல்லிக்காய் அளவு
Image Source: istock
உளுந்து - 1 கப் | பெருங்காயம் - 1 ஸ்பூன் | சர்க்கரை - 1 ஸ்பூன் | உப்பு - 1 ஸ்பூன் | எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: istock
பின் இதே கடாயில் காய்ந்த மிளகாய், புளி சேர்த்து 3 - 4 நிமிடங்களுக்கு வதக்கி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை உள்ள பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
Image Source: istock
இதேப்போன்று எடுத்துக்கொண்ட உளுந்து, எள்ளு ஆகியவற்றை தனித்தனியே கடாயில் சேர்த்து பதமாக வறுத்து எடுத்து - ஆறவிட்டு மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்க்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் கறிவேப்பிலை, பூண்டு, மிளகாய், புளி ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து உப்பு, பெருங்காயம், வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் இந்த சேர்மத்தை 2 - 3 முறை பதமாக அரைத்து எடுத்துக்கொள்ள நெல்லை ஸ்பெஷல் எள்ளு பொடி ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த எள்ளு பொடியை சிறிதளவு நல்லெண்ணெயுடன் கலந்து, சூடான இட்லி, தோசையுடன் சேர்த்து பரிமாறலாம்!
Image Source: instagram-com
Thanks For Reading!