May 31, 2024
நோய் எதிர்ப்பு மண்டலம் நமது உடலில் நோய்கள் ஏற்படாமல் எதிர்த்துப் போராட உதவுகிறது. நாம் செய்யும் ஒரு சில தவறுகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், அந்த ஒரு சில தவறுகள் பற்றி இங்கு காணலாம்!
Image Source: istock
உடல் எடையை குறைப்பதற்கு மருத்துவர்களின் ஆலோசனை இன்றி பலவித டயட் முறைகளை பெரும்பாலானோர் கடைப்பிடிக்கின்றனர். இதுபோன்ற சில டயட் முறைகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உடலுக்கு கிடைக்காததால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.
Image Source: istock
இப்போது பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் உணவுகளில் ஜங்க் ஃபுட்ஸ் இடம்பெறுகிறது. ஆனால் இது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது என்பதை அவர்கள் உணரவில்லை. ஆரோக்கியமற்ற ஜங்க் ஃபுட்ஸ் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Image Source: istock
மருத்துவ ஆலோசனை இன்றி நாம் உட்கொள்ளும் சில மாத்திரைகள் கூட நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். மருத்துவரின் ஆலோசனை இன்றி நாம் உட்கொள்ளும் மல்டி வைட்டமின்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
Image Source: istock
நமது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க நமது உடலுக்கு போதுமான ஓய்வு தேவை. நமது உடலுக்கு தேவையான ஓய்வை தூக்கத்திலிருந்து பெற முடியும். தூக்கமின்மை நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பினை அதிகரிக்கிறது. குறைந்தது 7 - 8 மணி நேரம் நமது உடலுக்கு ஓய்வு தேவை.
Image Source: istock
அளவுக்கு மிகுதியான புகையிலை பயன்பாடு ஆனது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் தொற்றுகள் தாக்கும் அபாயம் அதிகம்.
Image Source: istock
நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மிக முக்கிய பிரச்சனைகளில் மன அழுத்த பிரச்சனைகளும் ஒன்று. நீண்ட காலமாக இருக்கும் மன அழுத்த பிரச்சனைகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி அதன் செயல்பாட்டை குறைக்கும்.
Image Source: pexels-com
தற்போதுள்ள அலுவலக கலாச்சாரம் இருந்த இடத்திலேயே எல்லா வேலைகளையும் முடிக்கும்படி உள்ளது. ஒரே இடத்தில் அதிக நேரம் இருந்து வேலை செய்வதால் உடல் செயல்பாடு இல்லாமல் போகிறது. உடலில் இயக்கம் இல்லாமல் இருத்தலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் விஷயங்களில் ஒன்று.
Image Source: istock
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவித்து அதன் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.
Image Source: istock
Thanks For Reading!