[ad_1] பக்ரீத் ஸ்பெஷல் சுவையான 'Keema kaleji' ரெசிபி

Jun 14, 2024

BY: Anoj

பக்ரீத் ஸ்பெஷல் சுவையான 'Keema kaleji' ரெசிபி

தேவையான பொருட்கள்

நறுக்கிய மட்டன் துண்டுகள் - அரை கிலோ; மட்டன் கல்லீரல் - 300 கிராம்; இஞ்சி - 1 இன்ச்; கொத்தமல்லி பவுடர் - 1 டீஸ்பூன்; மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்; கொத்தமல்லி - 2 டீஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்

தயிர் - அரை கப்; கடுகு எண்ணெய் - தேவைக்கேற்ப; புதினா - 5; உப்பு - தேவைக்கேற்ப; எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்; பூண்டு - 2 பற்கள்; ப.மிளகாய் - 4; மஞ்சள் - அரை டீஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்

பிரியாணி இலை - 2; கிராம்பு - 5; கருப்பு மிளகு - 5; கருப்பு ஏலக்காய் - 2; ப.ஏலக்காய் - 4; இலவங்கப்பட்டை - 1; வர மிளகாய் - 4; ஜாதிபத்திரி - 1 டீஸ்பூன்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முழு மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும். அடுத்து, பொடித்த இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 2

இதற்கிடையில், ஒரு பவுலில் தயிரை சேர்த்து கட்டிகள் இல்லாத வகையில் கிளறி வைத்துக்கொள்ளவும்

Image Source: istock

செய்முறை படி - 3

இப்போது இஞ்சி, பூண்டுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிவிட்டு, தண்ணீரில் கழுவிய நறுக்கிய மட்டன் துண்டுகள் மற்றும் கல்லீரலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்

Image Source: pexels-com

செய்முறை படி - 4

சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அடுப்பில் வைத்தப்பிறகு, தயிரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அடுத்து, மஞ்சள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கடாயை மூடி அடுப்பில் சில நிமிடங்கள் வைத்திருக்கவும்

Image Source: istock

செய்முறை படி - 5

இப்போது மசாலா பொடிகளை தூவிவிட்டு, புதினா இலைகளை சேர்க்க வேண்டும். தண்ணீர் உறிஞ்சி எண்ணெய் பிரிந்துவரும் வரை கலவையை அதிக வெப்பத்தில் வைக்க வேண்டும்

Image Source: istock

சுவையான கீமா ரெடி

அவ்வளவு தான், எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியை தூவினால் சுவையான கீமா கலேஜி ரெடி. இதை பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த டிஷ் பக்ரீத் பண்டியை விருந்தில் தவறாமல் இடம்பெறக்கூடும்

Image Source: instagram-com/foodkars

Thanks For Reading!

Next: செட்டிநாடு ஸ்பெஷல் 'கும்மாயம்' ஸ்வீட் செய்வது எப்படி?

[ad_2]