Jun 11, 2024
மாங்காய் அதன் தனித்துவமான சுவை காரணமாக, பலரின் விருப்பமான உணவாக திகழ்கிறது. அதன் மீது உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி சாப்பிட்டால் அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்தப் பதிவில், பச்சை மாங்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி காணலாம்
Image Source: istock
பச்சை மாங்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் அவசியமாகும். இது ஆன்டி ஆக்ஸிடன்ட்-ஆக செயல்பாடு செல்களை சேதத்தில் இருந்து பாதுகாத்து, நாள்பட்ட நோய் அபாயத்தை குறைக்க செய்கிறது
Image Source: istock
பச்சை மாங்காயில் உள்ள என்சைம், கார்போஹைட்ரேட்டை உடைத்து உணவு ஜீரணிப்பதை எளிதாக்க செய்கிறது. மேலும், அதன் நார்ச்சத்து உள்ளடக்கம், குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் அபாயத்தை குறைக்க செய்கிறது
Image Source: istock
இதிலுள்ள niacin எனும் வைட்டமின் பி3, ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய நோய் அபாயத்தை குறைக்க செய்கிறது. மேலும், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை, கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது
Image Source: istock
பச்சை மாங்காயில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை, சரும ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தில் கொடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
Image Source: pexels-com
பச்சை மாங்காய் குறைவான கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான தேர்வாகும். இதை உட்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு சட்டென அதிகரிக்க செய்யாது. மேலும், ஒட்டுமொத்த ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கக்கூடும்
Image Source: istock
வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் நிறைந்த பச்சை மாங்காய், பார்வை திறனை அதிகரிக்க சிறந்த உணவாக கருதப்படுகிறது. மேலும், மாலைக்கண் நோய், மாகுலர் சிதைவு போன்ற கண் நோய் அபாயங்களை குறைக்கக்கூடும்
Image Source: istock
கோடை காலத்தில் உடலில் இழந்த எலக்ட்ரோலைட் மீட்டெடுக்க பச்சை மாங்காய் உதவி புரிகிறது. உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுத்து, பல நோய் அபாயங்களை தடுக்கிறது
Image Source: istock
பச்சை மாங்காயின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவுகிறது. இதன் மூலம், பல் சிதைவு, ஈறு நோய் அபாயம் குறைய செய்கிறது. மாங்காயை நேரடியாக வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது ஜூஸ் வடிவில் அருந்த செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!