[ad_1] ‘பச்சை மிளகாய் மட்டன் கறி’ - எப்படி தயார் செய்வது?

Jun 6, 2024

BY: mukesh M

‘பச்சை மிளகாய் மட்டன் கறி’ - எப்படி தயார் செய்வது?

பச்சை மிளகாய் மட்டன் கறி!

தென் தமிழக பகுதிகளில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் பச்சை மிளகாய் மட்டன் கறியை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

மட்டன் - 1 கிலோ | பச்சை மிளகாய் - 10 | சின்ன வெங்காயம் - 30 | மஞ்சள் - 1 ஸ்பூன் | கடுகு - 1 ஸ்பூன் | கறிவேப்பிலை - 1 கொத்து | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட மட்டனை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

தொடர்ந்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சுத்தம் செய்து தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

தற்போது பச்சை மிளகாய் கறி தயார் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 4

கடுகு நன்கு பொரிந்த பின் இதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

தொடர்ந்து இதனுடன் உப்பு, மஞ்சள், மட்டன் ஆகியவற்றையும் சேர்த்து 10- 15 நிமிடங்களுக்கு வதக்கவும்.

Image Source: istock

பச்சை மிளகாய் மட்டன் கறி ரெடி!

பின் இதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து - பாத்திரத்தை மூடி நன்கு கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்க சுவையான பச்சை மிளகாய் மட்டன் கறி ரெடி!

Image Source: istock

எப்படி பரிமாறுவது?

சுவையான இந்த பச்சை மிளகாய் மட்டன் கறியினை ரொட்டி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சுட சுட பரிமாறலாம்!

Image Source: istock

Thanks For Reading!

Next: ரயில் நிலையங்களில் ருசிக்க வேண்டிய ஃபேமஸ் உணவுகளின் லிஸ்ட் இதோ!

[ad_2]