Jun 20, 2024
சில மாணவர்கள் படிக்கும் போது பாட்டு கேட்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இந்த பழக்கம் மன அழுத்தத்தை குறைப்பது, கவனம் செலுத்துவதை அதிகரிப்பது என பல வழிகளில் நன்மை அளிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: pexels-com
படிக்கும் போது பாட்டு கேட்பது, பாடத்தில் முழு கவனத்தை செலுத்துவதற்கான சூழலை உண்டாக்கிறது. குறிப்பாக, பிற தேவையற்ற சத்தங்களில் கவனம் செல்வதை தடுக்க உதவுகிறது. மேலும், அறிவாற்றல் திறனை மேம்படுத்தக்கூடும்
Image Source: pexels-com
பாட்டு கேட்பது மனநிலையை மேம்படுத்தி பாசிட்டிவ் சூழலை உருவாக்கக்கூடும். உங்களுக்கு பிடித்தமான பாடல்களை கேட்பது, படிக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக மாற்றி நீண்ட நேரத்திற்கு படிக்க வழிவகுக்கும்
Image Source: pexels-com
மியூசிக் கேட்பது மன அழுத்தம் மற்றும் கவலையை போக்கக்கூடும். குறிப்பாக, தேர்வு சமயத்தில் கடினமான பாடங்களை படிக்கையில் மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாப்பதோடு மனதை ரிலாக்ஸாக வைத்திருக்கக்கூடும்
Image Source: unsplash-com
பாடல்கள் கேட்பது ஆற்றல் அளவை மேம்படுத்துவதால், உற்பத்தி திறனை அதிகரிக்கக்கூடும். மேலும், பாசிட்டிவ் சூழல் திட்டமிட்ட இலக்கை முடிக்க வேண்டும் எனும் தன்னம்பிக்கையை தரக்கூடும்
Image Source: pexels-com
தேர்வு சமயத்தில் படித்ததை ஞாபகத்தில் வைத்திட, பாடல்கள் கேட்பது நிச்சயம் உதவியாக இருக்கும். இதற்கு கிளாசிக்கல் மியூசிக் கேட்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
Image Source: pexels-com
படிக்கும் போது இசையைக் கேட்பதன் மூலம், உங்க படைப்பாற்றல் திறனை வெளிக்கொண்டு வர முடியும். ஒரு விஷயத்தை புதிய பாணியில் அணுகக்கூடிய திறன் வளரக்கூடும். இது கட்டுரை எழுதுதல் அல்லது கடினமான கணக்குகள் தீர்த்திட உதவியாக இருக்கும்
Image Source: pexels-com
படித்தத்தை மனதிற்குள் ரிவைஸ் செய்து பார்ப்பது அல்லது எழுதியுள்ள விஷயங்களை சரிபார்க்கையில், அமைதியான சூழல் சிறந்த முடிவாகும். நீங்கள் பாடல்கள் கேட்கும் பட்சத்தில், மியூசிக் வால்யூம் குறைவாக வைத்திருக்க வேண்டும்
Image Source: pexels-com
classical music மற்றும் Instrumental music கேட்பது மூளையை தூண்டி படிப்பில் கவனம் செலுத்த உதவக்கூடும். உங்களுக்கு பழக்கப்பட்ட மியூசிக் பிளேலிஸ்ட்டை தயார் செய்து படிக்கும் போது கேட்க தொடங்குங்கள்
Image Source: pexels-com
Thanks For Reading!