May 29, 2024
புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும், அது தொடர்பான கருத்துகளை பரிமாற்றம் செய்ய வேண்டியதை நினைவில் வைத்துக் கொள்ளவும் சுருக்கமான குறிப்புகளை கையில் எடுக்கிறார்கள். இது எப்போது பார்த்தாலும் சொல்ல வேண்டிய விஷயத்தை நியாபகப்படுத்தும்.
Image Source: pexels-com
பெரிய தகவல்களை முழுவதுமாக படிக்காமல் சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து படித்தால் எளிதாக மனதில் நிற்கும். உதாரணமாக பத்து இலக்கு கொண்ட மொபைல் எண்ணை 012-345-6789 ஆக பிரித்து படித்தால் எளிதில் நினைவில் இருக்கும்.
Image Source: istock
படித்த தகவலை நினைவுகூறும் வகையில் நன்கு அறிந்த இடங்களின் சூழல்களோடு காட்சிப்படுத்துவது தான் லோகி முறையாகும். இது மிகப்பெரிய அளவில் பலனளிக்கும் யுக்தியாகும்.
Image Source: istock
கிடைக்கும் இடைவெளியில் நீங்கள் படித்ததை மதிப்பாய்வு செய்யலாம். சுயமாக பரிசோதனை செய்வது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நினைவாற்றலை அதிகரிக்கும். இதில் பின்னடைவு ஏற்பட்டாலும் தவறை கண்டறிந்து சரி செய்யலாம்.
Image Source: pexels-com
வாசிப்பு, மனப்பாடம் என்பதை காட்டிலும் நீங்கள் கற்றதை பிறருக்கு சொல்லிக் கொடுப்பதால் திறம்பட படிப்பில் சிறந்து விளங்க உதவுகிறது.
Image Source: istock
பாட புத்தகங்களை தாண்டி கற்றல் செயல்பாட்டில் உள்ள பிற விஷயங்களையும் முயற்சி செய்யலாம். டிஜிட்டல் வடிவில் புத்தகங்கள், ஆடியோக்கள் என நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம்.
Image Source: pexels-com
சிலருக்கு அமைதியாக இருக்கும் இடத்திலும், சிலருக்கு சத்தம் போட்டும் படிக்க பிடிக்கும். அதேபோல் படிக்கும்போது குறிப்பெழுதுதல், ஒருமுறைக்கு இருமுறை சொல்லி பார்த்தல் போன்ற செயல்கள் படித்ததை நினைவில் நிறுத்தும்.
Image Source: pexels-com
தூக்கமின்மை, பிற விஷயங்களில் காணப்படும் அதீத ஆர்வம் ஆகியவை நினைவாற்றலில் பிரச்சினையை உண்டு பண்ணும். எனவே போதுமாக தூக்கம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
Image Source: pexels-com
படிப்பதற்கு என போடப்பட்ட அட்டவணையை சரியாக பின்பற்றவும். அதேபோல் புரியும் வகையில் குறிப்பெடுத்தல், படித்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
Image Source: pexels-com
Thanks For Reading!