Jun 3, 2024
உலகளவில் சிறந்த கல்வி முறை அயர்லாந்தில் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் சர்வதேச அளவிலான வாய்ப்புகளை மாணவர்கள் பெறுவார்கள். படிப்புக்கு பிறகான தொழில் வாழ்க்கையையும் சிறப்பாக அமைகிறது.
Image Source: pexels-com
அயர்லாந்தில் செயல்படும் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அயர்லாந்து ஆங்கிலம் பேசும் நாடு என்பதால் பிற நாட்டு மாணவர்களுக்கும் கல்வி எளிதாகிறது.
Image Source: pexels-com
அயர்லாந்தில் கல்வி பயின்றால் 80 சதவீதம் வேலைவாய்ப்பு என்பது உறுதியாக கிடைக்கும். பல முன்னணி MNC கம்பெனிகளுக்கு அயர்லாந்து தான் தலைமையகமாக உள்ளது.
Image Source: pexels-com
அயர்லாந்தில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எளிதாக விசா கிடைக்கிறது. இளங்கலை பட்டதாரிகளுக்கு ஒரு வருடமும், முதுநிலை பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகள் வரையும் படிப்புக்கு பின்னால் தங்கும் வாய்ப்பை வழங்குகிறது.
Image Source: pexels-com
வெளிநாடுகளில் குறைந்த செலவில் படிக்க விரும்புபவர்களின் முதன்மை தேர்வாக அயர்லாந்து இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது இங்கு செலவு என்பது மிகவும் குறைவு
Image Source: pexels-com
ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் உலகில் சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளில் அயர்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
Image Source: pexels-com
அயர்லாந்து போன்ற நாடுகளில் இருக்கு கலாச்சாரம் மிகவும் வித்தியாசமானது. அங்கு மக்கள் சர்வதேச மாணவர்களை தங்கள் நாடுகளில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் விருந்தோம்பல் பண்பு பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
Image Source: unsplash-com
வெளிநாடுகளில் பாதுகாப்பாக சென்று படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அயர்லாந்து செல்லலாம். வாழ்க்கைத் தரம், அமைதி மற்றும் மனித மேம்பாட்டில் அந்நாடு சிறந்து விளங்குகிறது.
Image Source: pexels-com
அயர்லாந்து படிக்க செல்பவர்கள் இலவச பேருந்து சலுகை, பொது சுகாதார சேவைகள். வீட்டு மானியங்கள், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றை எளிதாக பெறலாம்.
Image Source: pexels-com
Thanks For Reading!