[ad_1] படிப்பிற்காக புதிய நகரத்திற்குச் செல்கிறீர்களா? அப்போ இதை படிங்க!

Aug 9, 2024

படிப்பிற்காக புதிய நகரத்திற்குச் செல்கிறீர்களா? அப்போ இதை படிங்க!

mukesh M

படிப்பிற்காக புதிய நகரம்?

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் இணைவதற்காக நகரத்திற்கு செல்லும் கிராமப்புற மாணவர்கள்; செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: unsplash-com

நகரத்தை பற்றி ஆராயுங்கள்!

குறிப்பிட்ட ஒரு நகரத்தில் கல்வி கற்க செல்வதற்கு முன், அந்த நகரை குறித்து சிறிதளவு ஆராய்வது அவசியம். குறித்த அந்த நகரின் வரலாறு என்ன? வசதிகள் என்ன? குற்றப்பின்னணி என்ன? என்பது தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சேகரிப்பது அவசியம்!

Image Source: unsplash-com

தங்கும் இடத்தை உறுதி செய்யுங்கள்!

கல்லூரி விடுதியாக இருப்பினும் சரி அல்லது தனி அறையாக இருப்பினும் சரி, உங்கள் கல்வி காலம் துவங்குவதற்கு முன்னர் தங்கும் இடத்தை ஏற்பாடு செய்வது அவசியம். கடைசி நேர அலைச்சல்களை தவிர்க்க இது உதவியாக இருக்கும்!

Image Source: unsplash-com

போக்குவரத்து வசதிகளை அறியுங்கள்!

உங்கள் ஊருக்கும், நகருக்கும் இடையே உள்ள போக்குவரத்து வசதிகள் என்ன? இந்த போக்குவரத்து வசதிகளை உங்கள் தேவைக்கு ஏற்ற வகையில் எப்படி பயன்படுத்துவது? என புரிந்துக்கொள்ளுங்கள்!

Image Source: unsplash-com

பணத்தேவைக்கு என்ன செய்வீர்கள்?

படிப்பிற்காக புதிய நகரத்திற்கு நகரும் போது தங்குமிடம், உணவு, பயணச்செலவு மற்றும் பல செலவுகள் என பணத்தேவை அதிகரிக்கும். இந்த நிதி தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்வது? என்பது குறித்து முன்னதாகவே சிந்தித்து முடிவு எடுப்பது அவசியம்!

Image Source: unsplash-com

அளவான உடமைகள்!

புதிய நகரத்திற்கு (இடத்திற்கு) செல்லும் போது அளவான ஆடை, உடமைகளை எடுத்துச்செல்வது நல்லது. வீட்டில் இருக்கும் அனைத்தையும் எடுத்துச் சென்று கல்லூரி விடுதி அறையை அடைத்துவிடாதீர்கள்!

Image Source: unsplash-com

முதலுதவி பெட்டி அவசியம்!

அளவான உடமைகளை எடுத்துச்செல்லும் அதேநேரம் அத்தியாவசியமான பொருட்களை கொண்டுச்செல்வதும் அவசியம். அந்த வகையில் முதலுதவி பெட்டி ஒன்றினை உங்களுடன் எடுத்த செல்வது நல்லது!

Image Source: unsplash-com

நண்பர்களை தேடுங்கள்!

நீங்கள் படிக்கும் கல்லூரியில் உங்கள் ஊரில் (அ) அருகாமை ஊரில் இருந்து யாரும் இணைகிறார்களா? என்பதை விசாரித்து அறிந்து, அவர்களுடன் நட்பு பாராட்டலாம். அல்லது, கல்லூரியில் இணைந்தவுடன் வகுப்பு தோழர்களுடன் புதிய நட்பு வட்டத்தை உண்டாக்கலாம்!

Image Source: pexels-com

நம்பிக்கையுடன் இருங்கள்!

ஒருவேளை நண்பர்கள் யாரும் இல்லாமல் தனியே பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், கவலை வேண்டாம். நம்பிக்கையுடன் தனித்து சென்று வென்று வாருங்கள்!

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: செய்யும் வேலையில் இந்த விஷயம் இல்லையா? அப்போ ராஜினாமா செய்வது நல்லது!

[ad_2]