Jun 29, 2024
படிப்பு என்பது நம் அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியம். ஆனால் அத்தகைய படிப்புகள் சிலருக்கு கசப்பான மற்றும் சவாலான ஒன்றாக அமைகிறது. இதனால் இடைநிற்றல் விகிதங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. அது ஏன் என்பது பற்றி காணலாம்.
Image Source: pexels-com
மருத்துவ படிப்புகளுக்கான ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் சிக்கலான மருத்துவ நடைமுறைகள் ஆகியவற்றை புரிந்து கொள்வதில் அதீத சிந்தனை தேவைப்படுவதால் 10 -15% பேர் பாதியிலேயே படிப்பை கைவிடுகின்றனர்.
Image Source: pexels-com
நோய்களுக்கு உண்டான மருந்து, மாத்திரை போன்ற மருந்தியல் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு வேதியியல், உயிரியல், மருத்துவம் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது. மேலும் இதில் மருத்துவ சிகிச்சையில் நோயாளி பராமரிப்பு பயிற்சியும் தேவை என்பதால் 10 முதல் 20 சதவிகிதம் வரை படிப்பை நிறுத்துகின்றனர்.
Image Source: pexels-com
சட்டம் தொடர்பான படிப்புகளில் சிக்கலான கோட்பாடுகளை புரிந்துக் கொள்வது மற்றும் திறம்பட வாதிடுவது போன்றவை தேவை. இந்த படிப்பை 20 முதல் 30 சதவிகிதம் வரை பாதியில் நிறுத்துகின்றனர்.
Image Source: pexels-com
ஆர்க்கிடெக்சர் எனப்படும் கட்டடக்கலை மாணவர்கள் சவாலான பாடத்திட்டத்தை எதிர்கொள்கின்றனர். இதில் வரைதல், சவாலான திட்டங்கள், வரலாறு பற்றிய தகவல் போன்றவை அவசியம் என்பதால் 25 முதல் 30 சதவிகிதம் மாணவர்கள் பாதியிலேயே வெளியேறுகின்றனர்.
Image Source: pexels-com
கணிதத்தில் கோட்பாடுகள், சிக்கலுக்கான தீர்வு, பகுப்பாய்வு திறன்கள் போன்றவை பற்றிய புரிதல் அவசியம். பலருக்கும் கணிதம் பள்ளிக்காலத்திலேயே கசப்பான ஒன்றாக மாறுகிறது. இதனால் கல்லூரியில் 30 முதல் 40 சதவிகிதம் பேர் பாதியிலேயே நிற்கின்றனர்.
Image Source: pexels-com
இயக்கவியல், மின்காந்தவியல், வெப்ப இயக்கவியல் என பல சவால்கள் நிறைந்த பிரிவுகளை உள்ளடக்கிய இயற்பியல் படிப்புகளை 30 முதல் 40 சதவிகிதம் பேர் பாதியிலேயே நிறுத்துகின்றனர்.
Image Source: pexels-com
பட்டய கணக்கியல் திட்டங்கள், நிதி தணிக்கை, வரி மற்றும் வணிக சட்டங்கள் போன்றவை சவால் நிறைந்த சிஏ படிப்புகள் கடினமான தேர்வு முறையை கொண்டுள்ளது. இதில் பாதிக்கு பாதி மாணவர்கள் இடைநிற்றலை எதிர்கொள்கின்றனர்.
Image Source: pexels-com
சிவில், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளை கொண்ட பொறியியல் படிப்புகள் சவாலான பாடங்களையும், பயிற்சி மற்றும் கடினமான தேர்வுகளையும் கொண்டுள்ளது. இதில் 40 முதல் 50 சதவிகித மாணவர்கள் பாதியில் நிற்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.
Image Source: pexels-com
Thanks For Reading!