May 13, 2024
நம்மில் ஒரு சிலருக்கு படுக்கும் போது மட்டும் நெஞ்சு வலி ஏற்படுவது உண்டு. இந்த விசித்திர பிரச்சனையின் காரணம் என்ன? இந்த பிரச்சனையை தீர்க்க உதவும் வழிகள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
படுக்கையில் படுக்கும் போது உண்டாகும் இந்த நெஞ்சு வலி ஆனது மாரடைப்பில் இருந்து முடுவதுமாக மாறுபடுகிறது. குறிப்பாக இது, நெஞ்செரிச்சல், சொரிமான பிரச்சனைகளுடன் ஒப்பிடப்படும் ஒன்றாகும்!
Image Source: istock
உடல் உள் உறுப்புகளில் சீரான இரத்த ஓட்டம் இல்லாத போது இந்த வகை நெஞ்சுவலி ஏற்படுகிறது. குறிப்பாக, தசைகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாத போது இந்த பிரச்சனை உண்டாகிறது.
Image Source: istock
Myocardial Ischemia எனப்படுவது இதயம் மற்றும் இதயம் சார்ந்த தசை பகுதிகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் நிகழாத ஒரு நிலை ஆகும். இந்த நிலை ஆனது, படுக்கும் போது உண்டாகும் நெஞ்சு வலிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
Image Source: istock
இதயத்திற்கு போதுமான இரத்த ஓட்டம் செல்லாத நிலையை மருத்துவர்கள் angina pectoris என குறிப்பிடுகின்றனர். இதயத்தை கசக்குவது போன்று இருக்கும் இந்த நிலை ஆனது, நெஞ்சு இறுக்கம் - அழுத்தம் மற்றும் இறுக்க தன்மை இருப்பது போன்ற உண்ர்வை உண்டாக்கும்!
Image Source: istock
படுக்கும் போது நெஞ்சு வலி உண்டாக்கும் இந்த ஆரோக்கிய அசௌகரிய நிலை ஆனது கடுமையான உடல் வலிக்கும் வழிவகுக்கிறது. குறிப்பாக, கழுத்து, தோள்பட்டை, அடிவயிற்று பகுதிகளில்.
Image Source: istock
இதயம் சார்ந்த தசை பகுதிகளுக்கு போதுமான அளவு இரத்த ஓட்டம் நிகழாத அதேநேரம், இது இதயம் - நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் அழுத்தத்தையும் உண்டாக்குகிறது. அந்த வகையில் இது மூச்சு திணறலையும் ஏற்படுத்துகிறது.
Image Source: pexels-com
குறிப்பிட்ட இந்த பிரச்சனைகளை CT Scan, Cardiac MRI, Echocardiogram, இரத்த பரிசோதனை உள்ளிட்ட வழிகள் மூலம் உறுதி செய்து, மருத்து - மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
படுக்கும் போது உண்டாகும் இந்த நெஞ்சுவலி பிரச்சனையை அலட்சியமாக விடுவது; நிமோனியா, நுரையீரல் இரத்த கட்டி, GERD, செரிமானம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!