Jun 21, 2024
கருஞ்சீரகம், நைஜெல்லா சாடிவா என்ற தாவரத்தில் இருந்து வருகிறது. இந்த விதைகள் மத்திய கிழக்கு உணவு வகைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
Image Source: istock
கருஞ்சீரகம் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த விதைகளில் கொழுப்பு அமிலங்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
Image Source: istock
இதில் முடி வளர்ச்சியை தூண்டும் லினோலிக் அமிலம் உள்ளது. தைமோகுவினோன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது முடி வளர்ச்சியை பாதுகாக்கிறது.
Image Source: istock
இந்த ஹேர் மாஸ்க் உங்கள் மயிர்க்கால்களை வலுவாக்குகிறது. கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. கூந்தல் பட்டு போன்று வழுவழுவென இருக்கும்.
Image Source: istock
4 டீஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் 2 டீஸ்பூன் தயிரை தயார்நிலையில் வைத்துகொள்ளுங்கள்
Image Source: istock
கருப்பு சீரக விதைகளை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.
Image Source: istock
இப்பொழுது இந்த பேஸ்ட்டை கூந்தல் முழுவதும் அப்ளை செய்யுங்கள். ஒரு பாத்திங் கேப் கொண்டு மூடிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும்.
Image Source: istock
அரை மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசுங்கள். கண்டிஷனரை பயன்படுத்துங்கள். ஒரு வாரத்திற்கு இதை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
Image Source: pexels-com
தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை நீக்குகிறது. மேலும், முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
Image Source: istock
Thanks For Reading!