[ad_1] பணத்தை மிச்சப்படுத்தக் கூடிய Budget Vacation-க்கான டிப்ஸ்!

Jun 12, 2024

பணத்தை மிச்சப்படுத்தக் கூடிய Budget Vacation-க்கான டிப்ஸ்!

Pavithra

லோ பட்ஜெட் வெக்கேஷன்!

சுற்றுலா பயணங்கள் பொதுவாகவே அதிக செலவு வாய்ந்தது தான், ஆனால் அந்த செலவுகளைக் குறைக்கப் பல வழிகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

Image Source: unsplash-com

Off-season பயணம்!

நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு விடுமுறை தினங்களையும், சீசன் நாட்களையும் தவிர்த்து ஆஃப்-சீசனில் சென்றால் பயண செலவுகள் தொடங்கி தங்குமிட செலவு வரை பாதிக்குப் பாதியாகக் குறைக்கலாம்.

Image Source: unsplash-com

டிக்கெட் முன்பதிவு

சுற்றுலாவுக்கான பட்ஜெட்டில் பெரும்பகுதியைப் பயணத்திற்குத் தான் ஒதுக்க வேண்டி இருக்கும். விமானம் மற்றும் ரயில் டிக்கெட்டுகளை சில மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யுங்கள்.

Image Source: unsplash-com

ஹோம் ஸ்டே!

ஹோட்டலுக்கு ஆகும் செலவைக் குறைக்க ஹாஸ்டல் அல்லது ஹோம் ஸ்டேவை தயங்காமல் தேர்ந்தெடுங்கள். சிலவற்றில் இலவசமாக வீட்டில் சமைத்த உணவுகளும் வழங்கப்படுகின்றன, இது கூடுதல் பணத்தை மிச்சப்படுத்தும்.

Image Source: unsplash-com

வாடகை வாகனங்கள்!

பைக், கார், ஸ்கூட்டர் என உங்கள் வசதிக்கேற்ப வாகனத்தை வாடகைக்கு எடுப்பதன் மூலம் நீங்கள் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்திற்குப் பயணிக்க முடிவதோடு, குறைந்த செலவிலும் பயணிக்கலாம்.

Image Source: pexels-com

ஷாப்பிங்

குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது தங்களுக்கே பரிசுகள் அல்லது அலங்கார பொருட்களை வாங்க விரும்பினால் அவற்றை அதிக விலைக்குச் சுற்றுலாத் தலங்களில் வாங்குவதைத் தவிர்த்து உள்ளூர் சந்தையை அணுகுங்கள்.

Image Source: unsplash-com

சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்!

கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் சலுகைகளுடன் பலவிதமான தள்ளுபடிகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள் போன்றவைக்கு இவற்றை முறையாகப் பயன்படுத்துங்கள்.

Image Source: unsplash-com

பேரம் பேசுதல்!

ஹோட்டல்கள், ஆட்டோ மற்றும் டாக்ஸி பயணங்கள் அல்லது ஷாப்பிங்கின் போது முடிந்தவரைப் பேரம் பேசுங்கள். இதன் மூலம் அதிக விலைக்குப் பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்கலாம்.

Image Source: unsplash-com

உள்ளூர் உணவகங்கள்!

சுற்றுலா சென்ற இடத்தில் ஸ்டார் ஹோட்டல்களை தவிர்த்து ஒரு உள்ளூர் வாசியைப் போல் சிறு உணவகங்களிலும், பிரபல தெரு உணவுகளையும் உண்பதில் ஆர்வம் காட்டுங்கள்.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: சென்னையிலிருந்து ஒரு Bike Trip - வார விடுமுறையை செலவிட சிறந்த இடம்!

[ad_2]