Jun 17, 2024
பப்பாளி தோலில் பப்பெய்ன் என்ற நொதி உள்ளது. இது இறந்த சரும செல்களை நீக்க உதவுகிறது. சரும துளைகளை சரி செய்ய உதவுகிறது. இது ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது.
Image Source: istock
கரும்புள்ளிகள் மற்றும் சரும சுருக்கங்கள் நிறைய பேர் சந்திக்கும் பிரச்சினைகளாக உள்ளது. பப்பாளி தோலில் உள்ள ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் (AHAs) மற்றும் பீட்டா கரோட்டின் கரும்புள்ளிகளை போக்க உதவுகிறது.
Image Source: istock
பப்பாளி தோலில் உள்ள என்சைம்கள் மற்றும் விட்டமின்கள் சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
Image Source: istock
பப்பாளியில் லைகோபீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகளை போக்குகிறது. ப்ரீ ரேடிக்கலில் இருந்து சருமத்தை காக்கிறது.
Image Source: istock
பப்பாளித் தோலில் உள்ள என்சைம்கள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. இது வீக்கம், சிவத்தல் மற்றும் எரிச்சலை போக்க உதவுகிறது. முகப்பருக்களை குறைக்கிறது.
Image Source: istock
பப்பாளியில் ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கும் பண்புகள் உள்ளன. இது சருமத்திற்கு சீரான நிறத்தை தருகிறது. இதிலுள்ள விட்டமின் ஏ மற்றும் ஈ மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
Image Source: istock
பப்பாளியில் சருமத்திற்கு தேவையான விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பப்பாளியில் உள்ள விட்டமின் ஏ, சி, ஈ, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
Image Source: istock
பப்பாளியில் பீட்டா கரோட்டீன் என்ற சத்து உள்ளது. இது சூரிய ஒளியில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. பப்பெய்ன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள், சருமத்தை பளபளப்பாக வைக்கிறது.
Image Source: pexels-com
பப்பாளி தோலை சருமத்தில் நேரடியாக தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். கண்களுக்கு கீழே உள்ள பகுதியிலும் அப்ளை செய்யலாம். சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை ஜில் வாட்டரில் வாஷ் செய்ய வேண்டும்
Image Source: istock
Thanks For Reading!