Jun 8, 2024
உலகமே வியந்து பார்க்கும் ஒரு நாடாக இந்தியா வளர்ந்து நிற்கும் நிலையில், இந்த பாரத நாட்டை குறித்து பலரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு நாம் காணலாம்!
Image Source: unsplash-com
மகாராஷ்டிராவில் உள்ள ஷனி ஷிங்னாபூர் கிராமத்தில் உள்ள வீடு, அலுவலகம், கோவில் என எதற்கும் கதவுகளோ பூட்டோ கிடையாது. அதே சமயம் இங்குள்ள காவல் நிலையத்தில் எந்த திருட்டு வழக்கும் இன்று வரை பதியப்படவில்லை.
Image Source: instagram-com
வைரம் பற்றிய மிகப் பழமையான குறிப்பிடு கிமு 320-296 காலத்தைச் சேர்ந்த சமஸ்கிருத பிரதியில் உள்ளது. அதன் படி சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் முதல் வைரம் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Image Source: pexels-com
ஒவ்வொரு ஆண்டும் 467 அங்குல மழைப்பொழிவைப் பெற்று உலகின் மிகவும் ஈரமான பகுதி என்கிற பெயரை மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் கிராமம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்திலும் இந்தியாவின் சிரபுஞ்சி உள்ளது.
Image Source: unsplash-com
காஷ்மீரின் டால் ஏரியில் உலகின் ஒரே மிதக்கும் தபால் நிலையம் இன்றும் இயங்கி வருகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் 15,400 அடி உயரத்தில் இருக்கும் தபால் நிலையம் உலகின் மிக உயரமானது ஆகும்.
Image Source: instagram-om
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான வாரணாசி தொடர்ந்து மக்கள் வசிக்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்று. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இது சிவபெருமானால் உண்டாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
Image Source: unsplash-com
உலகிலேயே அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியா உள்ளது. இந்தியாவின் பொருளாதார சமத்துவமின்மையே அதை இன்னும் ஏழை நாடுகளின் பட்டியலிலேயே வைத்துள்ளது.
Image Source: unsplash-com
பாம்புகள் மற்றும் ஏணிகள் கொண்ட பரமபத விளையாட்டு குழந்தைகளுக்கு ஒழுக்கம் மற்றும் கர்மா பற்றிக் கற்பிக்க உருவாக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து சென்ற இந்த விளையாட்டு சில மாறுதல்களை அடைந்தது.
Image Source: facebook-com
தலை முடி பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்திய ‘ஷாம்பூ’ இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ‘சம்பு’ என்பது மசாஜ் அல்லது பிசைதல் என்று பொருள் கொண்ட சமஸ்கிருத வார்த்தை ஆகும்.
Image Source: unsplash-com
Thanks For Reading!