Anoj
Jun 4, 2024
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பாலக்காடு ஐயர் குடும்பத்தில் 1984 ஜூன் 4ம் தேதி பிறந்தார் பிரியாமணி. இவர் 12ம் வகுப்பு படிக்கும் போது, இயக்குனர் பாரதிராஜாவால் சினிமா துறையில் அறிமுகப்படுத்தப்பட்டார்
Image Source: instagram-com/pillumani
பிரியாமணிக்கும் சினிமா துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரது பாட்டி கமலா கைலாஸ், 1960களில் முன்னணி நடிகையாக இருந்தார். அதேபோல், நடிகை வித்யா பாலன் மற்றும் பின்னணி பாடகி மால்குடி சுபா ஆகியோருக்கு உறவினர் ஆவார்
Image Source: instagram-com/pillumani
பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிரியாமணி, சைக்காலஜி பாடத்தின் மீதான ஆர்வத்தால் correspondence வாயிலாக பட்டப்படிப்பை முடித்தார்
Image Source: instagram-com/pillumani
சினிமா துறையில் கால்பதிக்கும் முன்பு, பிரியாமணிக்கு மாடலிங்கில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. ஏரளாமான விளம்பரங்களுக்கு மாடலாக பணியாற்றியுள்ளார்
Image Source: instagram-com/pillumani
பருத்திவீரன் திரைப்படம் மூலம் கோலிவுட்டின் முக்கிய நடிகையாக வலம்வர தொடங்கினார் பிரியாமணி. அப்படத்தில் அவரது நடிப்பை பாராட்டி தேசிய விருது வழங்கப்பட்டது
Image Source: facebook-com/engeyumkadhalofficial
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் பிரியாணி நடித்துள்ளார். அவர் மேலே குறிப்பிட்டுள்ள 5 மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய திறனும் கொண்டுள்ளார்
Image Source: instagram-com/pillumani
Event organiser முஸ்தஃபா ராஜ் என்பவரை பிரியாமணி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் நெருங்கிய வட்டாரத்தின் முன்னிலையில், 2017ஆம் ஆண்டு நடைப்பெற்றது
Image Source: instagram-com/pillumani
பிரியாமணி சமூக பணிகள் மீது அதிக ஆர்வமிக்கவர். பெண் உரிமை, கல்வி மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு தொடர்பான பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடங்கி வைத்துள்ளார்
Image Source: instagram-com/pillumani
2005ல் Evare Atagaadu எனும் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த ரோலில் நடிப்பதற்கு ரூ.500 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார். தற்போது சினிமாவை கலக்கும் பிரியாமணி ரூ.80 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது
Image Source: instagram-com/pillumani
Thanks For Reading!