[ad_1] பருவமழை காலத்தில் வளரக்கூடிய தாவரங்கள் என்னென்ன தெரியுமா ?

பருவமழை காலத்தில் வளரக்கூடிய தாவரங்கள் என்னென்ன தெரியுமா ?

Jul 15, 2024

By: Nivetha

பருவமழை

அந்தந்த தட்வெட்ப காலங்களில் குறிப்பிட்ட தாவரங்கள் வளரும். அப்படி பருவமழை காலத்தில் வளரக்கூடிய தாவரங்கள் குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம் வாருங்கள்.

Image Source: pixabay

புதினா

ஈரமான மண் மற்றும் நேரடி சூரிய ஒளி இல்லாமல் வளரக்கூடிய தன்மை கொண்டது புதினா. எனவே இது பருவமழை காலத்தில் வளர்க்க ஏற்றதாகும். இதற்கு நீர்பாசனமும் அதிகம் தேவைப்படுகிறது.

Image Source: pixabay

வெண்டைக்காய்

வெண்டைக்காய் செடியும் அதிக ஈரப்பதம் மற்றும் சூடான சூழலில் செழிப்பாக வளரக்கூடியது. மழைப்பொழிவு இச்செடி நன்கு வளரவும், காய் வைக்கவும் உதவுகிறது.

Image Source: pixabay

துளசி

மழைப்பொழிவு, ஈரப்பதமான மண் உள்ளிட்டவை துளசியின் வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படுகிறது.

Image Source: istock

பாகற்காய்

பாகற்காய் பருவமழை காலத்தில் செழிப்பாக வளரக்கூடிய தாவரங்களுள் ஒன்றாகும். மழைப்பொழிவு உறுதியாகும் பட்சத்தில் இந்த தாவரம் நன்கு வளருவதோடு காய் வைக்கவும் ஆரம்பிக்கும்.

Image Source: istock

கற்றாழை

கற்றாழை நன்கு வளர ஈரப்பதமான மண்ணும், குறைந்த பராமரிப்பும் போதுமானது. மழை இதன் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Image Source: pixabay

எலுமிச்சை

மழை பொழிவும் ஈரப்பதமும் எலுமிச்சை செடி செழித்து வளர உதவுகிறது. ஈரப்பதமான சூழல் பசுமையான இலைகளை கொண்டு செடியை வளர செய்கிறது.

Image Source: pixabay

மஞ்சள்

இந்த தாவரத்திற்கு நன்கு வடிகட்டிய மண்ணும், தொடர் நீர்பாசனமும் நிச்சயம் தேவை. எனவே பருவமழை காலம் வேர் தண்டில் கிழங்கு வைக்க உகந்த காலமாக கூறப்படுகிறது.

Image Source: pixabay

தோட்டக்கலை

வீட்டிலேயே தோட்டம் வைத்திருப்போருக்கும், தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம் உள்ளவர்களுக்கும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள செய்தி நிச்சயம் பயன்படும்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: கருவில் உள்ள குழந்தை உண்மையில் எட்டி உதைக்குமா?

[ad_2]