May 5, 2024
பற்களில் உண்டாகும் மஞ்சள் அடுக்கு (பற்காரை) பற்களின் அழகை பாதிப்பதோடு, ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இந்நிலையில், இந்த கூடுதல் அடுக்கை எப்படி இயற்கை வழியில் சுத்தம் செய்வது என இங்கு காணாலம்!
Image Source: istock
பற்காரை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சுத்தமாக பல் துலக்காதது தான். மேலும் பற்களில் படியும் உணவு மற்றும் தாதுக்கள் பாக்டீரியாக்களை உருவாக்கும். இதனால் அது பற்காரையாக மாறுகிறது.
Image Source: istock
மஞ்சள் நிறத்தில் படியும் இந்த பற்காரைகளை வீட்டில் இருந்தபடியே சரி செய்யலாம். இயற்கை வழியில் இந்த பிரச்சனையை சரி செய்ய உதவும் குறிப்புகள் சிலவற்றை பற்றி இங்கு நாம் காணலாம்.
Image Source: istock
பேஸ்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து தினசரி பல் துலக்கி வர பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிற காரை மாறி இயற்கையான நிறத்தை பெறலாம். ஒரு டீஸ்பூனுக்கும் குறைவான பேக்கிங் சோடாவை பயன்படுத்தவும்.
Image Source: istock
கொய்யா பல மருத்துவ நன்மைகளுக்கு பெயர் பெற்றது. அதன் இலைகள் மற்றும் காய்களில் இயற்கையாகவே காரைகளை அகற்றும் தன்மை உள்ளது. இது பற்களில் இது போன்ற காரைகள் படிவதை குறைத்து பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
Image Source: pexels-com
வெள்ளை வினிகரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மவுத்வாசாக பயன்படுத்தி வர காரைகள் சரியாகும்.
Image Source: istock
ஆரஞ்சு தோலை நன்றாக பேஸ்ட் போல் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை பற்களில் பேஸ்டுடன் சேர்த்து இரண்டு நிமிடம் தேய்க்கலாம். வாரத்துக்கு இருமுறை இப்படி செய்து வர பற்களில் உள்ள காரை நீங்கும்.
Image Source: istock
கற்றாழை பலவித சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்பட்டாலும், பற்களில் உள்ள காரையை போக்குவதற்கும் உதவுகிறது. இதில் உள்ள கசப்பு தன்மை பற்காரைகளை அகற்ற உதவும். இதை பேஸ்ட் வடிவில் பயன்படுத்தலாம்.
Image Source: istock
வைட்டமின் சி நிறைந்த உணவுகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் வாயில் பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கிறது. தக்காளி மற்றும் ஸ்ட்ராபெரிகளில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இவற்றை பேஸ்ட் மாதிரி தயார் செய்து பயன்படுத்தலாம்.
Image Source: istock
Thanks For Reading!