May 23, 2024
நாம் உண்ணும் உணவுகளில் உள்ள அமிலத்தின் காரணமாக பற்களில் அரிப்பு ஏற்பட்டு பல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் அந்த ஒரு சில பழங்கள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
அன்னாசி பழம் மிகவும் சுவை வாய்ந்தது என்றாலும், பற்களின் எனாமலை உடைக்கக்கூடிய நொதிகளை கொண்டிருக்கிறது. இது பல் அரிப்புக்கு வழிவகுக்குறது. எனவே அன்னாசி பழம் சாப்பிட்ட பிறகு பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
Image Source: istock
கிவியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும் இது பற்களில் படியும் போது பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதில் உள்ள அமிலத்தன்மை நாளடைவில் எனாமலை பாதித்து பற்களை அரிக்க தொடங்குகிறது.
Image Source: istock
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. சிட்ரஸ் நிறைந்த பழங்களில் அமிலத்தன்மையும் நிறைந்திருப்பதால் இவை பற்களில் படியும் போது பாதிப்பினை ஏற்படுத்தி பல் அரிப்புக்கு வழிவகுக்கிறது.
Image Source: istock
ஆப்பிள் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்றாலும், அதிலுள்ள அதிக அமிலத்தன்மை மற்றும் சர்க்கரையின் உள்ளடக்கம் பற்களை பாதிக்கும் தன்மை கொண்டவை. அளவுக்கு அதிகமாக ஆப்பிளை உட்கொள்ளும் போது அது பல் அரிப்புக்கு வழிவகுக்கிறது.
Image Source: pexels-com
சுவை மிகுந்த பழங்களில் திராட்சையும் ஒன்று. ஊட்டச்சத்து நிறைந்த பழம் திராட்சை என்றாலும், அதிக அளவில் திராட்சையை உட்கொள்ளும்போது அது எனாமலை பாதித்து பல் அரிப்பினை ஏற்படுத்துகிறது.
Image Source: istock
மாம்பழத்தை பிடிக்கவில்லை என்று கூறுபவர்களே இல்லை என கூறலாம். அப்படிப்பட்ட மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை மற்றும் அமில தன்மை நிறைந்துள்ளது. அளவுக்கு அதிகமாக மாம்பழங்களை உட்கொள்ளும் போது அது எனாமலில் பாதிப்பை ஏற்படுத்தி பல் சிதைவுக்கு வழிவகுக்கிறது.
Image Source: istock
செர்ரி பழங்களை பிரஷாக (பச்சையாக) உட்கொள்ளும் போது பாதிப்பு இல்லை. ஆனால் உலர்ந்த செர்ரி பழங்களை உட்கொள்ளும் போது அது பற்களில் படியும் வாய்ப்புகள் அதிகம். இது நாளடைவில் பற்களின் எனாமலை பாதித்து பல் சிதைவை ஏற்படுத்துகிறது.
Image Source: istock
நீர்ச்சத்து நிறைந்துள்ள மாதுளையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிக அளவில் இருந்தாலும் அமிலத்தன்மையும் இருக்கிறது. இதனால் அளவுக்கு அதிகமாக மாதுளம் பழத்தை உட்கொள்ளும் போது அது எனாமலில் பாதிப்பை ஏற்படுத்தி பல் சிதைவுக்கு வழிவகுக்கிறது.
Image Source: istock
Thanks For Reading!