[ad_1] பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் மருதாணி

Aug 20, 2024

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் மருதாணி

Nivetha

மருதாணி

மருதாணி வெறும் அழகிற்காக மட்டும் நாம் பயன்படுத்தும் பொருள் அல்ல. அதன் இலைகள் நமது தலைமுடி, சருமம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்திலுமே பெரும் பங்கினை வகிக்கிறது. அது குறித்து தான் இப்பதிவில் தற்போது நாம் காணவுள்ளோம்.

Image Source: istock

நச்சுக்கள் வெளியேறும்

மருதாணி இலைகளை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு இரவு சாப்பிட்ட பிறகு அந்த தண்ணீரை குடியுங்கள். இப்படி செய்வதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும், மேலும் அதிலுள்ள நச்சுக்களும் வெளியேற்றப்படும். பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

Image Source: istock

மருதாணி இடுவதற்கான காரணம் ?

மருதாணி இலைகளுக்கு நமது உடலில் இருக்கும் நரம்புகளின் செயல்பாட்டினை தூண்டக்கூடிய பண்புகள் அதிகம். அதனால் தான், அணைத்து நரம்புகளின் மையப்புள்ளியாக கருதப்படும் உள்ளங்கைகளில் மருதாணி வைக்கப்படுகிறது, இப்படி வைப்பதனால் நமது நரம்புகள் வலுப்பெறும்.

Image Source: istock

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோய் பாதிப்பு காரணமாக நமது நரம்புகள் விரைவில் பலவீனமாகிவிடுமாம். இதன் காரணமாக காலில் ரத்த ஓட்டம் குறைய துவங்கும், மேலும் பாதங்களில் ஒருவித எரிச்சல், வலி உள்ளிட்டவை இருந்துக்கொண்டே இருக்குமாம். இப்பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வினை அளிக்கிறது மருதாணி.

Image Source: istock

மனநோய்

அந்த காலம் முதல் மருதாணி இலைகளை அரைத்து கை, கால்களில் பூசுவது அழகுக்காக மட்டுமல்ல. இதனை பூசுவதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். சொரியாசிஸ்-குஷ்டம் போன்ற தோல் வியாதிகளுக்கு சிறந்த மருந்தாக மருதாணி செயல்படுகிறது. மேலும் இது உடலின் பித்தத்தை நீக்குவதோடு அதனால் ஏற்படும் மன கவன சிதறல், மனநோய் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

Image Source: istock

நகச்சுத்தி

நகச்சுத்தி ஏற்பட்டால் மருதாணி இலைகளை அரைத்து பூசினால் நல்ல பலன் கிடைக்கும். அதே போல் மருதாணி இலைகளோடு சிறிதளவு கற்பூரம், மஞ்சள், வசம்பு உள்ளிட்ட பொருட்களை சேர்த்து அரைத்து கால் ஆணி இருக்கும் பகுதியில் கட்டி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

Image Source: istock

எரிச்சல்

பாதங்களில் ஏற்படும் எரிச்சல், சேற்றுப்புண் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மருதாணி இலைகளோடு சிறிது மஞ்சளையும் சேர்த்து அரைத்து பாதிப்புள்ள பகுதிகளில் பூசி வந்தால் ஒரு வாரத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும்.

Image Source: istock

தீ காயங்கள்

மருதாணி இலைகளை அரைத்து தீ காயங்கள் மற்றும் கொப்பளங்கள் மீது தடவி வந்தால் காயங்கள் சீக்கிரம் ஆறும். இதனோடு சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து சொரி, சிரங்கு, தொடைகளுக்கு இடையே ஏற்படும் அரிப்பு, படை உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் இடத்தில் தடவினால் குணமாகும்.

Image Source: istock

நகங்களின் ஆரோக்கியம்

நாம் மருதாணி இலைகளை அரைத்து அடிக்கடி நகங்களில் பூசி வரும் பட்சத்தில் நகங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடியும். ஆனால் ஒரு சிலருக்கு மருதாணி இலைகள் குளிர்ச்சியானவை என்பதால் சளி பிடிக்கும். அதற்கு மருதாணி இலைகளோடு நொச்சி இலைகளையும் சேர்த்து அரைத்து பூசினால் சளி பிடிக்காமல் தவிர்க்கலாம்.

Image Source: pexels

Thanks For Reading!

Next: நீரிழிவு மற்றும் உடல் எடை குறைப்புக்கு சிறந்த உணவு அரிசி சாதமா இல்லை ரொட்டியா ?

[ad_2]