Aug 9, 2024
வாழைக்காயை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் பல்வேறு மருத்துவ நன்மைகளை பெறலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக வாழைக்காய் வாயு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் இதனை அளவோடு தான் சாப்பிட வேண்டும் என்ற பொதுவான கருத்து இருக்கும் நிலையில், பல வியாதிகளை குணமாக்க இந்த காய் பயன்படுகிறது என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
Image Source: istock
சில காய்கறிகள் சமைக்கும் முறையில் தனது தன்மையை மாற்றி பலன்களை அளிக்கும். ஆனால், வாழைக்காயை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அதன் குணங்கள் மாறாது. இந்நிலையில் வாழைக்காயை வைத்து பருப்பு போட்டு கூட்டு, பொரியல், வறுவல், வடை ஆகியவற்றை செய்து சாப்பிடலாம்.
Image Source: istock
வாழைக்காயை மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நெய் ஊற்றி அதில் நன்கு சிவக்க வறுத்து எடுத்து காலை மாலை என இரண்டு வேளை ஒரு கைப்பிடியளவு சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
Image Source: istock
நமது உடலில் பித்தம் அதிகரிக்கும் பட்சத்தில் வாய்வு தொல்லை, உதடுகளில் மற்றும் பாதத்தில் வெடிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் முரடாக மற்றும் வறட்சி போன்ற தொந்தரவுகள் ஏற்படக்கூடும். இந்நிலையில், தினமும் இரவு சாதத்தில் வாழைக்காயை சேர்த்து சாப்பிட்டு வர படிப்படியாக பித்தம் தணியும்.
Image Source: istock
வாழைக்காயை பொடியாக அரிந்து அதனை உப்பு தண்ணீரில் நன்கு ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நெய்யில் வறுத்து சாதத்துடன் மோர் கலந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும்.
Image Source: istock
வாழைக்காயில் பொட்டாசியம், நார்சத்து, மக்னீசியம், தாதுக்கள், மாங்கனீஸ், வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் அதிகளவு இரும்புச்சத்தும் உள்ளது, இக்காயை ஏதேனும் ஓர் வகையில் உணவில் சேர்த்து கொண்டால் ரத்தம் விருத்தி அடையும்.
Image Source: istock
கோடைக்காலத்தில் அதிகளவு வெப்பம் காரணமாக நமது உடல் உஷ்ணம் அடையக்கூடும். அதன் பாதிப்பாக சிலருக்கு இருமல் பிரச்சனை ஏற்படும். அப்படி இருக்கையில், ஒரு வாரத்திற்கு தினமும் வாழைக்காயை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் இருமல் நீங்கும்.
Image Source: istock
வாழைக்காயில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளும் பட்சத்தில் நமது உடலில் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Image Source: istock
என்னத்தான் இந்த காய் பல்வேறு வியாதிகளை குணமாக்க பயன்பட்டாலும் சிலருக்கு வாழைக்காய் அரிப்பு போன்ற அலர்ஜி பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். அப்படி ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொண்டு பின்னர் இந்த காயை சாப்பிடுவது நல்லது.
Image Source: pexels
Thanks For Reading!