May 17, 2024
தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் சில திரைப்படத்திற்கு பெரிதளவில் சர்ச்சை எழுந்து வருகிறது. அந்த வரிசையில் சர்ச்சை காரணமாக படத்தின் தலைப்புகளை மாற்றிய திரைப்படங்கள் பட்டியலை இங்கு காணலாம்.
Image Source: instagram-com
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பத்மாவத். பல ராஜ்புத் சாதி மக்களின் எதிர்ப்புக்கு பிறகு பத்மாவதி என்ற படத்தின் தலைப்பு பத்மாவத் என மாற்றப்பட்டது.
Image Source: instagram-com
பிரித்விராஜ் என்று பெயரிடப்பட்ட பாலிவுட் திரைப்படம் கரணி மற்றும் சேனாவின் மக்களின் சர்ச்சை காரணமாக இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பை சாம்ராத் பிரித்விராஜ் என்று மாற்றினர்.
Image Source: instagram-com
முதலில் பில்லு பார்பர் என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படம் மும்பையை மையமாக கொண்ட சலூன் மற்றும் பியூட்டி பார்லர் சங்கங்களின் போராட்டத்திற்குப் பிறகு படத்தின் தலைப்பிலிருந்து பார்ப்பர் என்ற வார்த்தை நீக்கப்பட்டது.
Image Source: instagram-com
முன்னதாக சத்ய நாராயணன் கி கதா என்று பெயரிடப்பட்ட இந்த பாலிவுட் திரைப்படத்தின் தலைப்பு இந்து மத அமைப்புகளின் சர்ச்சைகள் மற்றும் போராட்டங்களை அடுத்து சத்தியபிரேம் கி கதா என மாற்றப்பட்டு ரிலீஸ் ஆனது.
Image Source: instagram-com
முன்னதாக யாழ்ப்பாணம் என்று பெயரிடப்பட்ட இந்த பாலிவுட் திரைப்படத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்த காரணத்தினால் மெட்ராஸ் கஃபே என படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது.
Image Source: instagram-com
பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான திரைப்படம் ராம்லீலா. முன்னதாக ராம்லீலா என்ற பெயரிடப்பட்ட இந்த திரைப்படம் இந்து மதத்தினரின் சர்ச்சைகளுக்கு பிறகு கோலியோன் கி ராஸ்லீலா எனப் பெயர் மாற்றப்பட்டது.
Image Source: instagram-com
சமீபத்தில் ஹம் தோ ஹுமரே பாரா என்ற பாலிவுட் திரைப்படத்தின் தலைப்பிற்கு CBFC மறுப்பு தெரிவித்ததால் இதனை அடுத்து குமாரே பாரா என இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டது.
Image Source: instagram-com
இந்த படத்தின் முந்தைய தலைப்பான லவ் ராத்திரிக்கு விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திரைப்படத்தின் தலைப்பு லவ் யாத்திரி என மாற்றப்பட்டது.
Image Source: instagram-com
Thanks For Reading!