[ad_1] பளபளக்கும் கூந்தல் வேண்டுமா? அரிசியை இப்படி பயன்படுத்துங்க!

May 16, 2024

பளபளக்கும் கூந்தல் வேண்டுமா? அரிசியை இப்படி பயன்படுத்துங்க!

mukesh M

அரிசி - வெந்தயம் ஹேர் மாஸ்க்!

கூந்தல் உதிர்வை தடுத்து, பொலிவான மற்றும் பளபளப்பான கூந்தல் பெற உதவும் ஹேர் மாஸ்க் ஒன்றினை அரிசி, வெந்தயம் மற்றும் கற்றாழை கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

அரிசி - 1 கப் | வெந்தயம் - 1 கப் | கற்றாழை ஜெல் - 1 கப்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட அரிசி மற்றும் வெந்தயத்தை பாத்திரம் ஒன்றில் மூழ்கும் அளவு தண்ணீருடன் சேர்த்து 12 மணி நேரங்கள் வரை ஊற வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

12 மணி நேரங்கள் கழித்து, மிக்ஸி ஜார் ஒன்றில் இதனை சேர்த்து நன்கு விழுதாக ஆரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு (வடிகட்டி) மாற்றவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 3

பின் இதனுடன் கற்றாழை ஜெல் மட்டும் சேர்த்து கட்டிகள் இல்லா வகையில் நன்கு குழைத்துக்கொள்ள கூந்தல் பளபளப்புக்கு உதவும் ஹேர் மாஸ்க் ரெடி!

Image Source: istock

எப்படி பயன்படுத்துவது?

தயாராக உள்ள இந்த ஹேர் மாஸ்கினை கூந்தல், உச்சந்தலைக்கு அப்ளை செய்து 45 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின் மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்து விடவும்.

Image Source: istock

கூந்தல் உதிர்வு குறையும்!

கற்றாழை, வெந்தயம் கலவையில் தயாரான இந்த ஹேர் மாஸ்க் ஆனது உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து, தலைமுடி வேர் கால்களை பலப்படுத்தி, கூந்தல் உதிர்வை தடுக்கிறது.

Image Source: istock

கூந்தல் வறட்சி நீங்கும்!

கூந்தலில் இயற்கை எண்ணெயை தக்க வைக்கும் பண்பு கொண்ட கற்றாழை, வெந்தயம் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த ஹேர் மாஸ்க் ஆனது, கூந்தல் வறட்சியை தடுக்கிறது!

Image Source: istock

கூந்தல் பொலிவுக்கு!

கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டங்கள் அளிக்கும் இந்த ஹேர் மாஸ்க் ஆனது ஆனது, உறுதியான கூந்தல் பெற உதவுவதோடு, பளபளப்பான கூந்தல் பெறவும் உதவி செய்கிறது!

Image Source: istock

Thanks For Reading!

Next: உங்கள் கண் இமைகள் நீளமாகவும் அழகாகவும் வளர என்ன செய்யலாம்?

[ad_2]