May 24, 2024
குங்குமப் பூ அழகு சாதனத் துறையில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது முகப்பருக்கள் மற்றும் தோல் பிரச்சினைகளை போக்க கூடியது. குங்குமப் பூ சூரிய ஒளிக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தை காக்கிறது.
Image Source: istock
தேங்காய் எண்ணெய் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை பாதுகாக்கிறது. அழற்சியை குறைக்கிறது. சரும ஈரப்பதத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: istock
குங்குமப் பூ மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டுமே சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. குங்குமப் பூவில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன.
Image Source: pexels-com
3-4 குங்குமப் பூக்கள், வெதுவெதுப்பான பால், சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
இரவில் குங்குமப் பூ மற்றும் பாலை கலந்து வைத்து விடுங்கள். குங்குமப் பூக்கள் பாலில் நன்றாக ஊற வேண்டும்.
Image Source: istock
அடுத்த நாளில் அதனுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெயை சேருங்கள். அப்புறம் நல்ல கெட்டியான தயிரை சேருங்கள்.
Image Source: istock
இப்பொழுது ஒரு காட்டன் பஞ்சை எடுத்து நனைத்து அந்த கலவையை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
Image Source: istock
சிறிது நேரம் நன்றாக உலர விட்ட பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவுங்கள். நல்ல பொலிவான முகத்தை பெறுவீர்கள்.
Image Source: istock
சிலருக்கு, இந்த கலவை அழற்சி பாதிப்பை உண்டாக்க வாய்ப்புள்ளது. எனவே, எப்போதும் புதிய கலவையை சருமத்தில் அப்ளை செய்யும் முன்பு பேட்ச் டேஸ்ட் செய்வது சிறந்த முடிவாகும்
Image Source: istock
Thanks For Reading!