Jul 1, 2024
வெண்பூசணியில் நிறைய நீர்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், நார்ச்சத்துகள் உள்ளன.
Image Source: istock
வெண்பூசணி சாற்றை உட்கொள்ள மிக முக்கியமான காரணம் அதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இதில் விட்டமின் சி, கரோட்டீனாய்டுகள், ஃப்ளவனாய்டுகள் உள்ளன. இது செல் சேதம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து நம்மை காக்கிறது.
Image Source: istock
வெண்பூசணி சாற்றில் 96% நீர்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இதனை தொடர்ச்சியாக குடித்து வருவது, சருமத்தை நீரேற்றத்தை பராமரித்து வறட்சி ஏற்படாமல் தடுக்கக்கூடும்
Image Source: istock
வெண்பூசணி குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவு. இந்த சாற்றில் தேன் சேர்ப்பதன் மூலம் சருமத்தை பளபளப்பாக மாற்றிட முடியும்
Image Source: istock
வெண்பூசணி சாற்றில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தின் அடுக்குகளுக்குள் ஆழமாக ஊடுருவி சரும ஈரப்பதத்தை காக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை பிரகாசமாக மாற்றுகிறது
Image Source: pexels-com
வெண்பூசணி சாற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து சருமத்தை காக்கிறது. இது ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கிறது.
Image Source: istock
ஒரு வெண்பூசணி, 6 டீஸ்பூன் லெமன் ஜூஸ், 3 டீஸ்பூன் உப்பு, 3 டீ ஸ்பூன் கருப்பு மிளகுத்தூள், தேவைக்கேற்ப தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
வெண்பூசணியில் இருந்து தோல் மற்றும் விதைகளை அகற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து அதனுடன் உப்பு, லெமன் ஜூஸ் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கலக்க வேண்டும்.
Image Source: istock
இந்த வெண்பூசணி ஜூஸை குடித்து வர சரும ஆரோக்கியம் மேம்படும். இதை வாரத்திற்கு 3 முறை குடித்து வந்தால், நல்ல பலனை காண முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
Image Source: pexels-com
Thanks For Reading!