[ad_1] பளபளப்பான சருமத்தை பெற 'ஜான்வி கபூர்' பின்பற்றும் பேஸ் பேக்!

Jun 6, 2024

பளபளப்பான சருமத்தை பெற 'ஜான்வி கபூர்' பின்பற்றும் பேஸ் பேக்!

Anoj

ஜான்வி கபூர் பேஸ் மாஸ்க்

அம்மா ஸ்ரீ தேவி போலவே அழகிலும் திறமையிலும் ஜொலிப்பவர் நடிகை ஜான்வி கபூர் ஆவார். ஜான்வி கபூர் அவர்கள் தன்னுடைய சருமத்தை அழகாக மெருகேற்ற நிறைய சரும பராமரிப்பு விஷயங்களை செய்கிறார். அவர் பின்பற்றும் ஒரு ஃபேஸ் மாஸ்க்கை பற்றி இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/janhvikapoor

ஃபேஸ் பேக் காம்பினேஷன்

வாழைப்பழம், தயிர் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்கில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது சருமத்தை மென்மையாக வைப்பதோடு சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

Image Source: instagram-com/janhvikapoor

தேவையான பொருட்கள்

ஒரு பழுத்த வாழைப்பழம், 1 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

Image Source: istock

தயாரிக்கும் முறை

ஒரு முட்கரண்டி கொண்டு பழுத்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

Image Source: pexels-com

அப்ளை செய்யுங்கள்

இப்பொழுது இந்த பேஸ்ட்டை ப்ரஷ் கொண்டு கைகள், முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்யுங்கள். இதை அப்படியே 15-20 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

Image Source: istock

மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள்

ஒரு சுத்தமான டவலை எடுத்து முகத்தை நன்றாக துடைத்து விட்டு மாய்ஸ்சரைசர் அப்ளை செய்து கொள்ளுங்கள். இது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.

Image Source: pexels-com

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் உள்ளன. இது சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளித்து சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது.

Image Source: istock

தயிர்

தயிரில் லாக்டிக் அமிலம் காணப்படுகிறது. இது சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இது சருமம் எரிச்சலடைவதை தடுக்க உதவுகிறது.

Image Source: istock

பொலிவான சருமம்

இந்த ஃபேஸ் பேக் முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களால் ஆனது. இதை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி வந்தால் ஜான்வி கபூர் மாதிரி அழகான பொலிவான சருமத்தை பெறலாம்.

Image Source: instagram-com/janhvikapoor

Thanks For Reading!

Next: முகத்தில் பவுண்டேஷன் போடுவீங்களா? அப்போ இதை படிங்க!

[ad_2]