Aug 3, 2024
By: Nivethaநாம் சந்தையில் பழங்கள் வாங்க செல்லும் பொழுது பல கடைகளில் பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை நாம் பார்த்திருப்போம். பார்க்க ஃப்ரெஷ்ஷாக, பளபளப்பாக காணப்படும் இப்பழங்கள் அதிக விலை கூறப்பட்டாலும் அதனை மக்கள் வாங்கி செல்கிறார்கள். ஆனால் அந்த ஸ்டிக்கர் ஒட்ட என்ன காரணம் என்னவென்பது யாருக்கும் தெரியாது.
Image Source: pexels
இப்படி ஸ்டிக்கர் ஒட்டிய பழங்கள் பிரீமியம் வகையை சேர்ந்தது என்றும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் நம்முள் பலர் எண்ணுகின்றனர். நிஜத்தில் இதெல்லாம் உண்மை என்றால் நாம் விலை கொடுத்து வாங்குவதில் தவறில்லை. ஆனால் பல பழ வியாபாரிகள் மக்களின் இந்த மனநிலையை பயன்படுத்தி கொண்டு ஏமாற்றுகிறார்கள்.
Image Source: istock
ஆப்பிள் ஆரஞ்சு போன்ற பழங்களில் எண்கள் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். குறிப்பாக 4036, 4387 போன்ற 4 இலக்க எண்கள் 4ல் துவங்கும், இப்படி ஒட்டியிருந்தால் சற்று கவனம் தேவை. 4 இலக்க எண் ஸ்டிக்கர் கொண்ட பழங்கள் ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட பழங்கள் ஆகும்.
Image Source: pexels
இவ்வாறு 4 இலக்க எண்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பழங்கள் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு நேரடியாக தொடர்புடையவை என்பதால் இப்பழங்களை தவிர்ப்பது நல்லது. பழங்களின் தரத்தை குறிப்பிடும் வகையில் தான் இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது.
Image Source: pexels
ஒரு சில பழங்களில் 5 இலக்க எண்கள் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவை 84131, 89015 போன்ற 8ல் துவங்கும் எண்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் இருந்தால் அது மரபணு மாற்றப்பட்ட பழங்கள் என்று அர்த்தம் என்று கூறப்படுகிறது.
Image Source: pexels
மரபணு மாற்றப்பட்ட பழங்கள் ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்திய பழங்களை விட விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஏனெனில் இது ரசாயனம் கலந்த பழங்களை விட உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இதில் சில தீமைகளும் உள்ளன.
Image Source: pexels
தரமான பழங்களை எப்படி கண்டறிவது என்று பார்ப்போம். தரமான பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களிலும் 5 இலக்க எண்கள் தான் இருக்கும். ஆனால் அவை 9ல் இருந்து துவங்கும். உதாரணத்திற்கு 94356, 98905 போன்ற எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
Image Source: pexels
இது போன்ற தரமான பழங்கள் முழுக்க முழுக்க இயற்கை முறையில் பூச்சிக்கொல்லிகள், ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்டது. இது மற்ற பழங்களை விட உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைகளை பயக்கக்கூடியது. ஆனால் இதன் விலை மற்ற வகை பழங்களை விட அதிகம் தான்.
Image Source: pexels
சந்தைகளில் இனி பழங்கள் வாங்க போனால் இந்த விவரங்களை கண்காணித்து வாங்க பழகுங்கள். விலை அதிகமாக கொடுத்து வாங்கினாலும் தரமான பழங்களை தான் வாங்குகிறோமா என்பதை உறுதி செய்து கொண்டு வாங்குவது நல்லது. அதே போல் கடையில் இருந்து வாங்கி வந்த பழங்கள் காய்கறிகளை நன்கு கழுவி உலர வைத்த பின்னர் பிரிட்ஜில் வையுங்கள்.
Image Source: pexels
Thanks For Reading!