Aug 6, 2024
உங்கள் பாத சருமம் சொர சொரவென வறண்டு போய் இருக்க இறந்த சரும செல்கள் தான் காரணமாக அமைகிறது. எனவே பாதங்களில் உள்ள இறந்த சரும செல்களை நீக்க இயற்கையான வழிகள் உதவுகிறது.
Image Source: pexels-com
பாதங்களில் உள்ள இறந்த சரும செல்களை நீக்க சர்க்கரை அல்லது உப்பு போன்ற எக்ஸ்ஃபோலியண்ட் பயன்படுகிறது. பாதங்களை நன்றாக கழுவி விட்டு இந்த ஸ்க்ரப்பை கொண்டு பாதங்களை தேயுங்கள். பிறகு பாதங்களை நன்கு துடைத்து உலர வையுங்கள்.
Image Source: istock
பாதங்களில் உள்ள இறந்த சரும செல்களை நீக்க ப்யூமிஸ் ஸ்டோனை பயன்படுத்தலாம். ப்யூமிஸ் கல்லை நீரில் நனைத்து வட்ட இயக்கத்தில் பாதங்களில் தேயுங்கள். இது பாதங்களில் உள்ள இறந்த சரும செல்களை நீக்குகிறது.
Image Source: istock
எப்சம் உப்பில் மெக்னீசியம் சல்பேட் உள்ளது. வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு சேர்த்து 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊற வையுங்கள். இது இறந்த சரும செல்களை நீக்கி பாதங்களை மென்மையாக்குகிறது.
Image Source: istock
ஃபுட் பைலும் பாதங்களில் உள்ள இறந்த சரும செல்களை நீக்குகிறது. பாதங்களில் உள்ள கரடுமுரடான தோற்றத்தை மாற்றுகிறது.
Image Source: istock
ஃபேஸ் மாஸ்க்குகளைப் போலவே பாதங்களுக்கும் மாஸ்க்குகள் கிடைக்கின்றன. ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள், பீட்டா ஹைட்ராக்ஸி அமிலங்கள் ஃபுட் மாஸ்க்குகள் இறந்த சரும செல்களை நீக்குகிறது. இதை பயன்படுத்தலாம்.
Image Source: istock
வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தின் pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. இறந்த சரும செல்களை நீக்குகிறது. வெதுவெதுப்பான நீரில் வினிகரை சேர்த்து கால்களை 10-15 நிமிடங்கள் ஊற வைத்து பியூமிஸ் கல் கொண்டு தேயுங்கள்.
Image Source: istock
ஓட்ஸை நன்றாக தூளாக அரைத்து அத்தியாவசிய எண்ணெய் சிறுதளவு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் சேருங்கள். இதில் பாதங்களை 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இறந்த சரும செல்களை நீக்கி பாதம் பட்டு போன்று இருக்கும்.
Image Source: istock
தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து பாதங்களில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள். இரவில் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குங்கள். காலையில் நீரில் கழுவி விடுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!