Jul 3, 2024
சாலையோர உணவுகளில் பானிபூரி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும். அதன் சுவைக்கு பலரும் அடிமையாக இருப்பார்கள். ஆனால், அந்த பானிபூரி கேன்சர் உட்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள கூறுகின்றனர். அதைப் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: pexels-com
கர்நாடகா மாநிலத்தில் சாலையோரம் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 260 மாதிரிகளின் முடிவுகளில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது
Image Source: istock
260 மாதிரிகளில் சுமார் 41 மாதிரிகளில் புற்றுநோய் உண்டாக்கும் செயற்கை வண்ணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர, 18 மாதிரிகள் மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்றவை எனவும் தெரியவந்துள்ளது
Image Source: istock
பானிபூரி புற்றுநோயை மட்டும் உண்டாக்கவில்லை. அதை அதிகமாக சாப்பிடுகையில் உடலில் பல விதமான பிரச்சனைகளை ஏற்பட செய்யலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
Image Source: istock
பானிபூரியின் செயற்கை வண்ணங்கள் குடலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Image Source: istock
செயற்கை வண்ணங்களில் காணப்படும் சில ரசாயனங்கள், ஒவ்வாமை பிர்சசனையை உண்டாக்க வாய்ப்புள்ளது. தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம் உண்டாகுவதோடு சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புள்ளது
Image Source: istock
செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது, நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, குழந்தைகளில் நடத்தையில் மாற்றத்தை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது
Image Source: istock
சாலையோர பானிபூரி கடைகளில் சுகாதார சிக்கல்களும் அதிகமாகவே உள்ளது. முறையாக கைகளை கழுவாதது, பாத்திரங்கள் சுத்தமாக இல்லாதது, பொருட்களை முறையாக பாதுகாத்து வைக்காதது போன்றவை உணவை மாசுபடுத்தி, உணவு மூலம் பரவும் நோய் அபாயத்தை அதிகரிக்க செய்யலாம்
Image Source: istock
மழைக்காலத்தில் சாலையோர கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. நுண்ணுயிர்கள் பல்வேறு வழிகளில் நீர் ஆதாரங்களில் ஊடுருவுகின்றன. அவற்றை சாலையோர கடைகளில் பயன்படுத்துகையில் காலரா, டைபாய்டு போன்ற பாதிப்புகள் ஏற்பட செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!