[ad_1] பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?

Jul 20, 2024

பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?

Nivetha

பானி பூரி

பானி பூரி என்றாலே ஆரோக்கியமற்றது என்றும், சாப்பிட கூடாது என்றும் பல்வேறு கருத்துக்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த உணவை தடை செய்ய வேண்டும் என்றும் வாதம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதில் ஒரு சில நன்மைகள் மறைந்திருக்கிறது என்று இச்செய்தி குறிப்பு எடுத்துரைக்கிறது.

Image Source: istock

பானி பூரி மசாலா

பானி பூரி உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்றாலும், அதில் வைத்து கொடுக்கப்படும் மசாலா பொருட்களில் இருக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தான் நாம் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

Image Source: istock

செரிமானம்

பானி பூரியில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் செரிமானத்தினை மேம்படுத்த உதவுகிறது. இந்த பானி பூரியோடு கொடுக்கப்படும் புளி நீரில் மலச்சிக்கல், வாய்வு போன்ற தொந்தரவுகளுக்கு நிவாரணம் அளிக்கும் தன்மை கொண்டுள்ளது.

Image Source: istock

மசாலா பொருட்கள்

பானி பூரியுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், புளி, கொண்டைக்கடலை உள்ளிட்டவை மசாலா பொருட்களாக கொடுக்கப்படுகிறது. இந்த புளி தண்ணீரில் சேர்க்கப்படும் சீரகம் உள்ளிட்ட பொருட்களின் கலவை செரிமான நொதிகளை தூண்டி ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

Image Source: pexels

ரத்த சர்க்கரை அளவு

பானி பூரியோடு கொடுக்கும் இந்த புளி தண்ணீரில் சீரகம் மட்டுமின்றி மிளகு, இஞ்சி போன்ற பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறதாம். அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டி என்றும் கூறுகிறார்கள்.

Image Source: pexels

எடை இழப்பு

ஒரு பானி பூரியில் சுமார் 36 கலோரிகள் இருக்கும். அப்படி பார்த்தால் ஒரு பிளேட் பானி பூரியான 6 பூரியில் 216 கலோரிகள் இருக்கிறது. இது இரண்டு சப்பாத்தி சாப்பிடுவதற்கு சமம். அதனால் உடல் எடையினை குறைக்க நினைப்போர் அளவாக பானி பூரி சாப்பிடலாம்.

Image Source: pexels

இருமல்-சளி

பானி பூரி ரசத்தில் சேர்க்கப்படும் புதினா இருமல் மற்றும் சளிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது. மேலும் இதிலிருக்கும் வேகவைத்த பட்டாணி நமது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

Image Source: pexels

உருளைக்கிழங்கு

பானி பூரி மசாலாவில் வைக்கப்படும் உருளைக்கிழங்கில் நார்சத்து நிறைந்துள்ளதால் இதனை சாப்பிடும் பட்சத்தில் அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வினை கொடுக்கும். இதில் சேர்க்கப்படும் கொத்தமல்லி தழைகள் புதினாவோடு சேரும் பொழுது வாதம், ஆஸ்துமா போன்றவற்றால் ஏற்படும் தொந்தரவுகளும் குறையும்.

Image Source: pexels

வைட்டமின்கள்

நம்முள் பலரும் விரும்பி சாப்பிடும் பானி பூரியில் வைட்டமின்கள் ஏ, பி6, சி, டி, பி12, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்து உள்ளிட்ட உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறது. அதனால் அளவோடு பானி பூரி சாப்பிட்டு அதன் நன்மைகளை பெறுவதில் தவறில்லை.

Image Source: Samayam Tamil

Thanks For Reading!

Next: 58 வயதிலும் இளமையாக காட்சியளிக்கும் Chuando Tan - fitness ரகசியம் என்ன?

[ad_2]