Aug 5, 2024
மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தன்னுடன் மோதிய இமேன் கெலிப் ஒரு ஆண் என்று குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி குற்றச்சாட்டி விலகினார். ஏனெனில், 2023 உலக குத்துச்சண்டையில் இமேன் கெலிப்-ஐ பயோலிஜிக்கல் ஆண் என குறிப்பிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
Image Source: instagram-com/imane_khelif_10
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து பிரேசில் நாட்டின் நீச்சல் வீராங்கனை அனா கரோலினா வியேரா, ஒழுங்கின நடவடிக்கைக்காக வெளியேற்றப்பட்டார். அவர் காதலனை சந்திக்க ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேறியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது
Image Source: instagram-com/_anavieeiraa
பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது, தென் கொரியா அணியை வட கொரியா என்று தவறுதலாக அறிமுகப்படுத்தினர். இதற்கு தென் கொரியா அணியிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மன்னிப்பு கோரியது
Image Source: instagram-com
பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு 2016 பாலியல் குற்றவாளி Steven Van de Velde என்பவரை, Beach Volleyball போட்டிக்கு நெதர்லாந்து அனுப்பியற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
Image Source: instagram-com
பாரிஸ் ஒலிம்பிக்கில் அர்ஜென்டினா மற்றும் மொராக்கோ இடையிலான போட்டியின் போது, பாதுகாப்பை மீறி சில போராளிகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Image Source: instagram-com
பிரெஞ்சு நாட்டின் தடகள வீராங்கனை Sounkamba Sylla, ஹிஜாப் அணிந்திருந்ததை சுட்டிக்காட்டி ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது
Image Source: instagram-com
நியூசிலாந்து அணி வீராங்கனைகள் பயிற்சி பெறுவதை ட்ரோன் மூலம் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடா மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் Bev Priestman சிக்கிக்கொண்டார். அவருடன் சேர்ந்து 2 ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
Image Source: instagram-com/bevpriestman
பிரிட்டினின் சிறந்த ஹார்ஸ் ரைடரான Charlotte Dujardin, பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு குதிரையை துன்புறுத்திய வீடியோ வெளியானதை தொடர்ந்து இந்த முடிவை எடுத்தார்
Image Source: instagram-com/charlotte_dujardincbe
ஜப்பான் நாட்டின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை Shoko Miyata, பாரிஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு வெளியேறினார். அவர் அணியின் விதிமுறைகளை மீறி புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் குடித்ததால் ஒலிம்பிக் பயிற்சியில் இருந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்
Image Source: instagram-com
Thanks For Reading!