[ad_1] பாரிஸ் ஒலிம்பிக்கில் தடைகளை தாண்டி சாதித்த வீர மங்கைகள்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் தடைகளை தாண்டி சாதித்த வீர மங்கைகள்!

Anoj, Samayam Tamil

Aug 12, 2024

மனு பாக்கர்

மனு பாக்கர்

ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்னும் சாதனையை நிகழ்த்தியவர். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி பழுதால் பதக்கத்தை இழந்த அவர், கடின உழைப்பால் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கி சூடுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை வாங்கி கொடுத்துள்ளார்

Image Source: -instagram-com/bhakermanu

சிமோன் பைல்ஸ்

ஜிம்னாஸ்டிக் ஜாம்பவான் சிமோன் பைல்ஸ், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மனநல பிரச்சனை காரணமாக விலகினார். அவரால் உடலையும், மனதையும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. தொடர் மனநல பயிற்சியின் பலனாக, பாரிஸ் ஒலிம்பிக்கில் 3 தங்க பதக்கமும், 1 வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்

Image Source: instagram-com/simonebiles

நடா ஹஃபீஸ்

7 மாத கர்ப்பிணி நடா ஹஃபிஸ், பாரிஸ் ஒலிம்பிக்கில் வாள்வீச்சில் பங்கேற்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். முதல் சுற்றில் வென்ற நடா ஹஃபிஸ், தென் கொரியா வீராங்கணையிடம் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகே, 7 மாத கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்

Image Source: instagram-com/nada_hafez

இமான் கலீஃப்

அல்ஜீரியா நாட்டின் குத்துச்சண்டை வீராங்கனை இமான் கலீஃப், பாரிஸ் ஒலிம்பிக்கில் 66 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். ஆனால், அவர் பாலின சர்ச்சை காரணமாக ஒலிம்பிக் தொடர் முழுவதும் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது

Image Source: instagram-com/imane_khelif_10

Yaylagul Ramazanova

அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை Yaylagul Ramazanova, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றப்போது ஆறரை மாதம் கர்ப்பிணியாகும். 34 வயதாகும் அவர் பதக்கம் வெல்லவில்லை என்றாலும் வரலாற்றில் இடம்பிடித்தார்

Image Source: instagram-com/yayo_gul

Elle Purrier St. Pierre

அமெரிக்காவை சேர்ந்த தடகள வீராங்கனை Elle Purrier St. Pierre, குழந்தை பிறந்து 17 மாதங்களே ஆகியுள்ள நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று 8வது இடத்தை பிடித்தார். குழந்தை பிறந்ததால் வேகம் குறைந்துவிடாது என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்

Image Source: instagram-com/elleruns_4_her_life

ஜியிங் ஜெங்

9 வயதில் டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்த இந்த சீன வீராங்கணை, தனது ஒலிம்பிக் கனவை 58வது வயதில் நிஜமாக்கியுள்ளார். இலக்கை அடைய வயது ஒரு தடையில்லை என்பதை அனைவருக்கும் புரிய வைத்துள்ளார்

Image Source: facebook-com

இலோனா மஹர்

பாரிஸ் ஒலிம்பிக் ரக்பி போட்டியில் அமெரிக்காவின் மகளிர் அணி முதன்முறையாக பதக்கம் வென்றுள்ளது. அணியின் ஸ்டார் வீராங்கனை இலோனா மஹர், அதிகமான உடல் எடையால் கடுமையான விமர்சனைகளை எதிர்கொண்டார்.

Image Source: instagram-com/ilonamaher

லாரா க்ராட்டின்

பாரிஸ் ஒலிம்பிக்கில் 58 வயதாகும் குதிரையேற்ற வீராங்கணை லாரா க்ரோட்டி, தனது சக வீரர்களுடன் இணைந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். 2008ல் தங்க பதக்கமும், 2020ல் வெள்ளி பதக்கமும் வென்றார்.

Image Source: instagram-com/laurakraut

Thanks For Reading!

Next: Paris Olympics-ல் 50Kg பிரிவில் வினேசு போகாட் விளையாட காரணம் என்ன?

[ad_2]