May 25, 2024
பாலக்காடு மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான பலாக்கொட்டை குழம்பினை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
பலாக்கொட்டை - 1 கப் | வெங்காயம் - 1 | இஞ்சி - 2" அளவு | பச்சை மிளகாய் - 3 | பூண்டு பல் - 6 | தக்காளி - 2 | கறிவேப்பிலை - 1 கொத்து | மிளகாய் தூள் - 1 ஸ்பூன் | உப்பு - தேவையான அளவு
Image Source: istock
எண்ணெய் - 2 ஸ்பூன் | சீரகம் - 1 ஸ்பூன் | தேங்காய் துருவல் - 1 கப் | கரம் மசாலா - 1 ஸ்பூன் | மல்லி பொடி - 1 ஸ்பூன் | கடுகு - 1 ஸ்பூன் | பெருங்காயம் - 1 சிட்டிகை | பெருங்காயம் - 1 சிட்டிகை
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட பலாக்கொட்டை, வெங்காயம், இஞ்சி, தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி குக்கர் ஒன்றில் சேர்க்கவும்.
Image Source: pexels-com
பின் இதனுடன் கறிவேப்பிலை, மிளகாய் தூள், உப்பு மற்றும் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து 4 விசில் வர வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
Image Source: istock
இதனிடையே கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு எண்ணெயுடன் சீரகம், தேங்காய் துருவல், கரம் மசாலா, மல்லி பொடி சேர்த்து பச்சை வாசம் நீங்க வதக்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் குக்கரில் வேக வைத்த சேர்மங்களை சேர்த்து நன்கு ஒரு முறை கிளறவும். தொடர்ந்து போதுமான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி நன்கு கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
இதனிடையே தாளிப்பு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
Image Source: istock
பின் இந்த தாளிப்பினை அடுப்பில் கொதிக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்க சுவையான பலாக்கொட்டை குழம்பு ரெடி!
Image Source: istock
Thanks For Reading!