May 9, 2024
By: mukesh Mஎதிர்பாலின ஈர்ப்பு, அதிகப்படியான பாலியல் எண்ணங்கள், ஆசைகள் - நடவடிக்கைகள் மற்றும் தூண்டுதல்கள் கொண்டிருப்பதை ‘பாலியல் உறவுக்கு அடிமையாதல்’ என்கிறோம். இந்நிலையில் இந்த பிரச்சனையில் ஒரு சில அறிகுறிகள் பற்றி இங்கு காணலாம்.
Image Source: istock
பாலியல் செயல்பாட்டிற்கு அடிமையான நபர்கள் சுய கட்டுப்பாடுகள் இன்றி சுய இன்பம் கொள்ளும் வழக்கத்தை கொண்டிருப்பார்கள். நாள் ஒன்றுக்கு 2 மேற்பட்ட முறை சுய இன்பம் காண்பார்கள்.
Image Source: istock
ஆபாச காட்சிகளில் ஆர்வம் அதிகம் காண்பிப்பது, ஆபாச படங்களை பார்க்க துடிப்பது போன்றவை இந்த பாலியல் செயல்பாட்டிற்கு அடிமையான நபர்களிடம் காணப்படும் ஒரு சில அறிகுறிகள் ஆகும்.
Image Source: istock
பாலியல் செயல்பாட்டிற்கு அடிமையான நபர்கள்; ஒன்றுக்கு மேற்பட்ட நபருடன் பாலுறவு கொள்ளும் வழக்கத்தை கொண்டிருப்பார்கள். இதை தவிர்த்து புதியவர்களுடன் பாலியல் ரீதியான உறவை துவங்கவும் ஆர்வம் காட்டுவார்கள்.
Image Source: istock
பாலியல் செயல்பாட்டிற்கு அடிமையான நபர்கள்; தங்கள் மன அழுத்தம் - மன இறுக்கத்தை குறைக்க உடலுறவை ஒரு ஆயுதமாக பயன்படுத்த துவங்குவார்கள்
Image Source: istock
பாலியல் செயல்பாட்டிற்கு அடிமையான நபர்கள்; தாம்பத்திய உறவில் தங்களுக்கான பொறுப்புகளை தவிர்த்து பாலுறவு ஒன்றையே குறியாக வைத்து செயல்படுவார்கள்.
Image Source: istock
பாலியல் ஈடுபாடுகளுக்கு அடிமையான நபர்கள், இந்த பிரச்சனையில் இருந்து விடுபட உளவியல் நிபுணர்களின் உதவி நாடுவது நல்லது. உளவியல் மாற்றம் ஒன்றே இதற்கு தீர்வு ஆகும்.
Image Source: istock
உளவியல் நிபுணர்களை சந்திப்பது, மன மாற்றத்திற்கான ஒரு வழியாக இருக்கும் நிலையில், தியானம் - யோகா போன்றவற்றை செய்வதன் மூலம் நம் மன மாற்றத்தை நாமே உறுதி செய்ய முடியும்.
Image Source: pexels-com
பாலியல் ஈடுபாடுகளின் மீதான நாட்டத்தை தவிர்க்க, மாற்று (புத்தகம் வாசிப்பது, நடனம், இசை, சமையல் போன்ற) விஷயங்களை முயற்சித்து, இந்த பிரச்சனையில் இருந்து விடுபட முயற்சிக்கலாம்.
Image Source: istock
Thanks For Reading!