mukesh M
May 3, 2024
திரைப்படங்கள் வழியே நாம் அறியா பல விஷயங்களை நாள்தோறும் கற்று வரும் நிலையில், பாலிவுட் திரைப்படங்கள் வழியே நாம் கற்க வேண்டிய வாழ்க்கை பாடங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: instagram-com
காதல் உறவு திருமணத்தில் முடிய காதலித்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். இந்த முயற்சியின் எல்லை எதுவரை இருக்க வேண்டும் என்பதை 2 States (2014) திரைப்படத்தை பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள்!
Image Source: instagram-com
வாழ்வில் எத்தகைய கஷ்டம் வந்தாலும் அதனை சமாளிக்கும் தைரியமும், வாழ்க்கை துணையின் துணையும் அவசியம் என்பதை 2014-ஆம் ஆண்டு வெளியான Mary Kom திரைப்படம் நமக்கு கற்று தருகிறது.
Image Source: instagram-com
உங்கள் துணையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட கூடாது. துணையின் திறமைகளை கேட்டு அறிந்து, உங்கள் திறனை வளர்த்துக்கொள்தோடு, அவரது திறனை வளர்ப்பதிலும் உதவியாக இருக்க வேண்டும் என்பதை பிரேக் கி பாத் (2010) திரைப்படத்தின் வழியே நாம் கற்க வேண்டும்!
Image Source: instagram-com
காதல் கண்மூடித்தனமானது; எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி தோன்றுவது என்பதை கூறும் ஒரு திரைப்படமாக 2012-ஆம் ஆண்டு வெளியான Barfi திரைப்படம் பார்க்கப்படுகிறது!
Image Source: instagram-com
நீடித்த காதல் உறவுக்கு உறவில் நேர்மை அவசியம் என்பதை உணர்த்தும் திரைப்படமாக Kapoor & Sons (2016) பார்க்கப்படுகிறது. காமெடி கலந்த இந்த காதல் கதை, நவநாகரீக காதலர்களை பிரதிபலிக்கும் ஒரு கதையும் ஆகும்!
Image Source: instagram-com
சண்டை - சச்சரவு இல்லா காதல் / குடும்ப உறவில் சுவாரசியம் இருக்காது; காதலில் மோதலுக்கும் அவ்வப்போது இடம் அளியுங்கள் என்பதை கற்றுத்தரும் ஒரு திரைப்படமாக Happy Bhag Jayegi (2016) பார்க்கப்படுகிறது!
Image Source: instagram-com
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றப்படி உங்கள் காதலன் / காதலி இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். அவரின் குணாதிசயங்களோடு அவரை ஏற்றுக்கொள்ள முயற்சியுங்கள் என்பதை தும் லகா கே ஹைசா (2015) திரைப்படத்தின் வாயிலாக நாம் கற்க வேண்டும்.
Image Source: instagram-com
இன்பமும் - துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை; வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் துயரங்களை கண்டு முடங்குவதற்கு பதில், அதை கடந்து சென்று மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என பாலிவுட் திரைப்படங்கள் பல கூறுகிறது!
Image Source: instagram-com
Thanks For Reading!