Aug 16, 2024
உடலை ஃபிட்டாக வைத்துகொள்வதில் அதிக கவனத்தை செலுத்தும் பாலிவுட் நடிகைகள், காலையில் விரும்பி குடிக்கும் பானங்களின் பட்டியலை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: pexels-com
நடிகை சோனம் கபூர் தனது காலை பொழுதை, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீருடன் தொடங்குகிறார். இது செரிமானத்தை சீராக்குவதோடு சருமத்திற்கு ஊட்டச்சத்துக்களை அளிக்க செய்கிறது
Image Source: instagram-com/sonamkapoor
நடிகை கியாரா அத்வானி, காலையில் வெதுவெதுப்பான மஞ்சள் கலந்த தண்ணீரை குடிக்கிறார். மஞ்சளின் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், குடல், எதிர்ப்பு மண்டலம் மற்றும் சருமத்திற்கு உதவக்கூடும்
Image Source: instagram-com/kiaraaliaadvani
தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை கத்ரீனா கைப் குடிக்கிறார். அதன் பிறகு, செலரி ஜூஸை குடிக்க செய்கிறார். அவை உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகளை அளிக்க செய்கிறது
Image Source: pexels-com
நடிகை ஷில்பா ஷெட்டி காலையில் CCF என்னும் கேரம் விதைகள், சீரகம் மற்றும் சோம்பு கலந்த பானத்தை குடிக்க செய்கிறது. இது எடை இழப்பை ஊக்குவிப்பதோடு குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது
Image Source: instagram-com/theshilpashetty
மறைந்த ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து குடிக்கிறார். இதுதவிர, உடலை ஃபிட்டாக வைக்க வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே உட்கொள்கிறார்
Image Source: instagram-com/janhvikapoor
விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா, காலையில் 3 பானங்களை உட்கொள்கிறார். மஞ்சள் பால், எலுமிச்சை தண்ணீர் மற்றும் ஆல்கலைன் வாட்டர் குடிக்கிறார். இவை அசிடிட்டி பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது
Image Source: instagram-com/anushkasharma
நடிகை சாரா அலி கான், காலையில் மஞ்சள் கலந்த டீடாக்ஸ் தண்ணீரை தினமும் குடிக்கிறார். மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது
Image Source: instagram-com/saraalikhan95
மலைகா அரோரா, மூன்று விதமான டீடாக்ஸ் தண்ணீர் உட்கொள்கிறார். முதலில் எலுமிச்சை கலந்த ஹாட் வாட்டர், அடுத்து சீரகம், ஓமம் மற்றும் பெருஞ்சீரகம் கலந்த நீரை உட்கொள்கிறார். இறுதியாக, எலுமிச்சை, இஞ்சி மற்றும் மிளகு தூள் கலந்த நீரை குடிக்கிறார்
Image Source: instagram-com/malaikaaroraofficial
Thanks For Reading!