[ad_1] பாலூட்டும் பெண்களுக்கு ‘கால்சியம் தட்டுப்பாடு’ உண்டாவது ஏன்?

பாலூட்டும் பெண்களுக்கு ‘கால்சியம் தட்டுப்பாடு’ உண்டாவது ஏன்?

May 16, 2024

By: mukesh M

கால்சியத்தின் அவசியம்!

எலும்புகளின் ஆரோக்கியம், உடல் தசைகளின் செயல்பாடு, நரம்பு மண்டல ஆரோக்கியம் காக்க கால்சியம் ஒரு அத்தியாவசிய ஊட்டமாக பார்க்கப்படும் நிலையில், பாலூட்டும் பெண்களுக்கு இதன் தேவை என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

பாலூட்டும் பெண்களுக்கு கால்சியம்!

பிரசவத்திற்கு பிந்தைய காலக்கட்டத்தில் பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் சில முதுகு வலி, தசை பிடிப்புகள், சுவாச பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை போக்க, போதுமான ஆளவு கால்சியம் தேவைப்படும் நிலையில், பாலூட்டும் பெண்களுக்கு அவசியமான ஒரு ஊட்டமாக இது பார்க்கப்படுகிறது.

Image Source: pexels-com

கால்சியம் அளவு குறைந்தால்?

தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் உடலில் கால்சியம் தட்டுப்பாடு ஏற்படுவது பல்வேறு ஆரோக்கிய சிக்கலுக்கு வழிவகுக்கிறது. உடல் மெலிவுறுதல், ஆற்றல் இழப்பு, எலும்பு சார்ந்த பல பிரச்சனைகளுக்கு இந்த கால்சிய குறைபாடு வழிவகுக்கிறது.

Image Source: istock

குறைபாட்டை கண்டறிவது எப்படி?

பாலூட்டும் பெண்களின் உடலில் உண்டாகும் இந்த கால்சிய குறைபாட்டை நாம் ஒரு சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். கால்சியம் குறைப்பாட்டின் ஆரம்ப நிலை அறிகுறியாக தசைப்பிடிப்பு மற்றும் பலவீனம் பார்க்கப்படுகிறது

Image Source: istock

ஆஸ்டியோபோரோசிஸ்!

எலும்புகள் வலுவிழப்பதும், எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் உண்டாவதும் மருத்துவ துறையில் ஆஸ்டியோபோரோசிஸ் என அழைக்கப்படுகிறது. கால்சியம் குறைபாட்டின் காரணமாகவே இது நிகழ்கிறது.

Image Source: istock

பற்களில் பிரச்சனை!

பற்களின் ஆரோக்கியம் காக்க கால்சியம் அவசியமான ஒரு ஊட்டமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உடலில் கால்சியம் குறைப்பாடு உண்டாகும் போது பற்களில் வலுவிழப்பு - இழப்பு போன்றவை இயல்பான ஒன்றாக உள்ளது.

Image Source: istock

தட்டுப்பாட்டை தடுப்பது எப்படி?

ஆரோக்கியமான உணவு வழக்கத்தின் மூலம் இந்த கால்சிய குறைப்பாட்டை நாம் தடுக்கலாம். அந்த வகையில் பால், தயிர், சீஸ் போன்ற பால் பொருட்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகள், பாதாம் உள்ளிட்ட உணவு பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்!

Image Source: istock

சூரிய ஒளி நுகர்வு!

கால்சிய உறிஞ்சுதலுக்கு உதியாக இருக்கும் ஒரு வைட்டமினாக ‘வைட்டமின் டி’ பார்க்கப்படும் நிலையில், சூரிய ஒளி நுகர்வின் மூலம் வைட்டமின் டி அளவை அதிகரித்து, கால்சியம் தட்டுப்பாட்டை நாம் தவிர்க்கலாம்.

Image Source: istock

மருத்துவர் உதவி நாடலாம்!

பாலூட்டும் பெண்களின் உடலில் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாட ஆனது, தாய்பால் வழியே குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்க கூடும் என்பதால், குறிப்பிட்ட இந்த பிரச்சனை உண்டாகும் போது உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: கர்ப்ப காலத்தில் பெண்கள் விளாம்பழம் சாப்பிடுவது நல்லதா?

[ad_2]